For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா- ரஷ்யா கூட்டு ராணுவப்பயிற்சி...சீனா- பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்கு பதிலடி!

எல்லையில் அச்சுறுத்தல் கொடுத்துவரும் சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க, ரஷ்யாவுடன் வரும் அக்டோபர் மாதம் 10 நாட்களுக்கு நமது ராணுவம் கூட்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. இது முப்படைகளின் கூட்டுப்பயிற்சி என

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் எல்லையோரம் தினமும் பாகிஸ்தானும் சீனாவும் ராணுவ தொல்லை கொடுத்து போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இரண்டு நாடுகளையும் சமாளிக்க, ரஷ்ய நாட்டு ராணுவத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

இந்த கூட்டுப்பயிற்சி வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. அதில் இந்தியாவின் முப்படைகளும் ஆயுத பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு ராணுவமும் மேற்கொண்டுள்ளன.

 India and Russia to hold mega war games in October 2017

கடந்த சில மாதங்களாக சீனா மூலம் சிக்கிம் எல்லையிலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்திய ராணுவம், ரஷ்யாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தது. இதற்கு ரஷ்யாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து 2 நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை இணைந்து அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 10 நாட்கள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ரஷியாவின் மலைப்பகுதியான விளாடிவோஸ்டாக் உள்பட 3 பகுதிகளில் நடக்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியில் இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உள்பட 350 பேர் கலந்துகொள்கின்றனர். பயிற்சியின்போது, உண்மையில் போர் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, வியூகம் அமைத்து தாக்குதல் நடத்துவது ஆகியவை குறித்த ஒத்திகைகள் தத்ரூபமாக நடத்தி காட்டப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளும் அன்னிய நாட்டுடன் ஒரே நேரத்தில் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஷ்யாவுக்கும் இது முதல் முறை.

பிரதமர் மோடி ஜூன் மாதம் மேற்கொண்டிருந்த ரஷ்ய சுற்றுப்பயணத்தின்போது, இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. அதன் படி முப்படை கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

English summary
Indian Army, Navy and Air Force will embark on a mega joint war exercise with their Russian counterparts in October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X