இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்தது உண்மைதான் - எஸ்பிஐ ரிப்போர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்திருப்பதற்கு தொழில்நுட்ப கணக்கீடு முறை காரணமல்ல இது தான் உண்மை நிலை என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தும் சில தொழில்நுட்பக் காரணங்களால் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் எஸ்பிஐ இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மைதான் என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐயின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்திய பொருளாதாரத்தில் சுணக்கமான நிலை நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் பிரதிபலித்தது.

செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும்

செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும்

இந்தச் சரிவில் இருந்து மீள அரசு தனது செலவீனங்களை கட்டுப்படுத்துவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து மீள்வதற்குத் தேவையான உத்வேகத்தை அரசு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கவனமாக செயல்பட வேண்டும்

கவனமாக செயல்பட வேண்டும்

பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் செலவுகளைக் கண்டறிந்து கவனமாக பணத்தை செலவிட்டால் ஒழிய இந்த நிலைமையை சமாளிக்க முடியாது. சரிவில் இருந்து மீள இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, முந்தைய அரசுகளும் இதனைச் செய்துள்ளன.

யுபிஏவிலும் சரிந்தது

யுபிஏவிலும் சரிந்தது

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் 5.7 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார் அமித்ஷா. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013 - 14 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாகக் குறைந்து பின்னர் 7.1 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்ததாக கூறியிருந்தார்.

எப்போது உயரும்?

எப்போது உயரும்?

இந்நிலையில் அவரது கருத்துக்கு மாறாக இந்திய பொருளாதார மந்த நிலை கணக்கிட பயன்படுத்தும் தொழில்நுட்பக் காரணங்கள் மட்டுமல்ல உண்மை நிலையும் அது தான் என்று எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சரிவு தற்காலிகமானது தான் எப்போது உயரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெளிவாகக் கூறுப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Economic slowdown not just of technical reason but its real says SBI report and also adds not sure when it will be normal.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற