For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதில் வளையம்.. தலையில் துண்டு.. கையில் கம்பு.. தோற்று போனார் இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர்!

இந்தியாவின் முதல் மாட்டு மந்திரி சுயேச்சையிடம் தோல்வி அடைந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சரும் தோல்வியை சந்தித்தார்- வீடியோ

    ஜெய்ப்பூர்: காதில் வளையம்.. தலையில் ரெட் கலர் துண்டு.. கையில் ஒரு கம்பு... என வலம் வந்த இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர் பரிதாப தோல்வியை தழுவினார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக மாடுகள் நலத்துறைக்கு என்று தனியாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒட்டாராம் தேவசிதான்.

    இவர் ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் பாஜக அமைச்சர் ஆவார். சிரோஹி என்ற தொகுதியில் போட்டியிட்டு, சுயேச்சையிடம் தற்போது தோல்வி அடைந்துள்ளார்.

    காதில் வளையம்

    காதில் வளையம்

    எப்பவுமே வெள்ளை கலர் வேஷ்டி கட்டியிருப்பார். தலைக்கு சிவப்பு கலர் தலைப்பாகையைதான் அணிவார். அத்துடன் காதில் ஒரு வளையம் மாட்டியிருப்பார். எங்கு சென்றாலும், செல்லவில்லை என்றாலும், கையில் ஒரு கம்பு வைத்திருப்பார். இதுதான் இவரது அடையாளம். அதனால் எப்பவுமே எந்த கூட்டத்திலும் இவர் பளிச்சென தெரிவார்.

    ட்ரேட் மார்க்

    ட்ரேட் மார்க்

    இந்த டிரஸ் அவருக்கு ஒரு ட்ரேட் மார்க். இந்த கோலத்திலேயே அமைச்சரவை, சட்டமன்ற கூட்டங்களிலும் கூட கலந்து கொள்வார். இவர்தான் இப்போது ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் தோற்று போய் உள்ளார்.

    படுதோல்வி

    படுதோல்வி

    சுயேச்சை வேட்பாளர் சன்யாம் லோதா என்பவரிடம் 10,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்திருக்கிறார் ஒட்டாராம் தேவசி. இந்த சுயேச்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு ஒன்றும் புதிதில்லை.. இவர் ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர்தான் என்பதால் அவரது வெற்றி ரொம்ப எளிதாகிவிட்டது.

    மாட்டு அமைச்சர்

    மாட்டு அமைச்சர்

    ஒரு காலத்தில் போலீஸ்காரராக இருந்தவர் ஒட்டாராம் தேவசி. பின்னர் உடல் நிலை காரணமாக வேலையை விட்டு விட்டார். பிறகு அரசியலில் இணைந்தார். அமைச்சராகவும் உயர்ந்தார். இந்தியாவின் முதல் மாட்டு அமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர் கடைசியில் சுயேச்சையிடம் தோல்வி அடைந்திருப்பது சோகம்தான்.

    English summary
    India's first Cow Minister Otaram Dewasi loses to independent candidate in Rajasthan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X