For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : India's first indigenous air to air missle astra test

    புவனேஸ்வரம்: வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும்.

    ஒடிஸா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அஸ்திரா என்ற ஏவுகணைக்கான சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை அஸ்திராவாகும்.

    இது துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை படைத்தது. இதுகுறித்து டிஆர்டிஓ வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்

    விண்ணில்

    விண்ணில்

    அதில் வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை அஸ்திரா, சுகோய் 30 ஐ ரக போர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

    குறிவைத்து தாக்கும்

    குறிவைத்து தாக்கும்

    நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதையடுத்து சோதனை வெற்றி அடைந்துள்ளது. மணிக்கு 5,555 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அஸ்திரா, 70 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் குறிவைத்து தாக்கும்.

    பாராட்டு

    பாராட்டு

    இந்த சோதனை வெற்றி அடைந்ததற்கு டிஆர்டிஓ விஞ்ஞானிகள், ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் இருந்த பணியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உள்நாட்டில்

    உள்நாட்டில்

    நாட்டின் பாதுகாப்புத் துறையை பலப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாட பொருட்கள், ஆயுதங்களை கொள்முதல் செய்யும் இந்தியா உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரித்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

    English summary
    Astra Missle which fired from Sukhoi Su-30MKI combat aircraft. This was developed by DRDO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X