For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் அமையும் மெட்ரோ.. அடையாளத்தை மாற்றும் திருப்புமுனை முடிவு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைய உள்ளது. இதற்கு மற்ற இடங்களில் அமைப்பதைவிட இரு மடங்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நகரின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்காக கொல்கத்தா நகரின் சின்னமான வற்றாமல் ஓடும் ஹூக்லி ஆற்றின் கீழ் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைக்க உள்ளது. பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு மார்ச் 2022 க்குள் அமைக்க முடிவு செய்யதுள்ளது. இதனால் செலவுகளை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கிறது.

இந்த திட்டத்திற்காக இந்திய ரயில்வே வாரியத்திடமிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் வழங்க உள்ளது என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் மனஸ் சர்க்கார் தெரிவித்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடமிருந்து 41 கோடி ரூபாய் அளவுக்கு கடன் அளித்துள்ளன என்றும் கூறினார்.

அஸ்ஸாமை துண்டிப்போம் என பேச்சு.. ஜே.என்.யூ மாஜி மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு போலீசார் வலை அஸ்ஸாமை துண்டிப்போம் என பேச்சு.. ஜே.என்.யூ மாஜி மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு போலீசார் வலை

பல்வேறு சிக்கல்

பல்வேறு சிக்கல்

இந்தியாவின் மிகப் பழமையான மெட்ரோ நிறுவனமான கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம், 1984 ஆம் ஆண்டில் வடக்கு-தெற்கு சேவையுடன் தொடங்கியது, இது 2014 ஆம் ஆண்டளவில் விரிவாக்கப்படவிருந்தது, ஆனால் திட்டமிட்ட பாதையில் கொண்டு செல்வது சிக்கல்களை எதிர்கொண்டது. இந்த சிக்கல்கள் மொத்த திட்ட செலவு 14 கி.மீ.க்கு 4900 கோடி ரூபாயிலிருந்து 17 கிலோமீட்டருக்கு சுமார் 8600 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

மாசுபாடுக்கு நிவாரணம்

மாசுபாடுக்கு நிவாரணம்

மொத்த போக்குவரத்து தேவையில் 40%த்தை இரண்டு மெட்ரோ சேவைகளாலும் கையாளப்படும் "என்று கொல்கத்தாவில் உள்ள தனது மெட்ரோ தலைமை அலுவலகத்தில் அளித்த பேட்டியில் சர்க்கார் கூறினார்." இது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஒரு நிவாரணமாக இருக்கும் என்றும் நகரம் சிதைந்து போவதில் இருந்தும் காப்பாற்றப்படும் என்றார்-

900,000 மக்கள்

900,000 மக்கள்

ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் தினசரி சுமார் 900,000 மக்களை மெட்ரோ ரயில்கள் ஏற்றிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது நகர மக்கள்தொகையில் சுமார் 20% பேர் இதை பயன்படுத்துவார்கள்.

ஹவுரா பாலம்

ஹவுரா பாலம்

ஹுக்ளி ஆற்றில் 520 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைத்து அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் பாதையை கடக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே மெட்ரோ ரயில்களுக்கு எடுக்கும் என்கிறார்கள். பகல் நேரத்தைப் பொறுத்தவரை படகு பயன்படுத்தி ஆற்றை கடக்க 20 நிமிடங்கள் ஆகிறது. அதேநேரம் ஹவுரா பாலத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் எங்கு வேண்டுமானாலும் எடுக்கும் என்றும் சொல்கிறார்கள். எனவே ஹுக்ளி ஆற்றின் அடியில் மெட்ரோ நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைந்தால் அது கொல்கத்தாவில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India's First Underwater Metro to setup kolkatta city's iconic Hooghly river by March 2022 after a delay of several years doubled costs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X