For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம்

Google Oneindia Tamil News

சிம்லா: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.

Indias first voter Shyam Saran Negi is not keeping will

இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி.

அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரானார்.

இருவருக்கு அண்மைகாலமாக வயது முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதால் மாநில அரசு சார்பில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறார் இளவரசர் ஹாரி.. திடீர் முடிவு.. சூப்பர் காரணம்!பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறார் இளவரசர் ஹாரி.. திடீர் முடிவு.. சூப்பர் காரணம்!

அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் விபின் சிங் பார்மரின் அறிவுறுத்தலின் பேரில் கின்னார் மாவட்ட சுகாதாரத் துறையின் குழு, நேகியின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேகி விரைவில் குணம் பெற பார்மர் பிரார்த்தனை செய்துள்ளார்.

English summary
India's first voter Shyam Saran Negi is not keeping well and he is getting treatment at his home in Himachal Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X