For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

இந்தியாவின் டாப்-100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிகை. இதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் தொடர்பாக போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.

ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது போர்ப்ஸ் பத்திரிகை. இந்தப்பட்டியலுக்கு பிஸினஸ் உலகில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது.

டாப் -100 இந்தியப் பணக்காரர்களின் மொத்த மதிப்பு 479 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவே கடந்த ஆண்டு 376 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டை விட இது 26% அதிகம். இந்த 100 நபர்களில் தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த டாப்-10 பணக்காரர்கள் யார் தெரியுமா ?

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முதலிடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலராக இருக்கிறது. தன்னுடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இவரது சொத்துமதிப்பு அதிகரித்து உள்ளது. ஜியோ நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பான இணைய வசதியோடு கூடிய இலவச போன் மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. 2500 முன்பணம் கட்டினால் மூன்று வருடங்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

 அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

இந்திய டெக் உலகின் பிரம்மாண்ட நிறுவனம் விப்ரோ. அதன் நிறுவனர் அசிம் பிரேம்ஜி 19 பில்லியன் டாலர்களோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

 சிவ் நாடார்

சிவ் நாடார்

மூன்றாவது பணக்கார டெக் அதிபர் நம் ஊர்க்காரர். ஹெச்.சி.எல் நிறுவன அதிபர் சிவ் நாடார். 13.6 பில்லியன்களோடு இவர் டாப்-100 பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது நிறுவனத்தில் தற்போது 1,20,000க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கிறார்கள். உலக பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் இருக்கிறார்.

 சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

டாப்-100 பட்டியலில் இவருக்கு 14-வது இடம். பாரதி ஏர்டெல் நிறுவன இயக்குநர் தான் இந்த சுனில் மிட்டல். இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், ஜியோவின் வரவால் கொஞ்சம் ஆட்டம் கண்டு இருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 8.6 பில்லியன் டாலர்.

 அனில் அம்பானி

அனில் அம்பானி

நமது முகேஷ் அம்பானியின் தம்பி தான் அனில் அம்பானி. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இவரது நிறுவனம். சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை. இருந்தாலும் மீடியா, வர்த்தக சேவை என்று 3.16 பில்லியன் டாலர்களோடு டெக் பணக்காரர்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

 நாராயணமூர்த்தி

நாராயணமூர்த்தி

இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர். மூன்று தலைமுறைகளாக அந்த நிறுவனத்தைக் கட்டிக்காத்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ரிட்டயர்ட் ஆனார்.

 தினேஷ் நந்த்வானா

தினேஷ் நந்த்வானா

இந்தப் பட்டியலில் புதிதாக நுழைந்து இருப்பவர் தினேஷ். இணைய நிர்வாக சேவைகள் அளிக்கும் வக்ராஜ்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. டாப்-100 பட்டியலில் 1.72 பில்லியன் டாலர்களோடு 88-வது இடத்தில் இருக்கிறார்.

 நந்தன் நீல்கனி

நந்தன் நீல்கனி

இன்போசிஸ் நிறுவனத்தின் இன்னொரு நிறுவனர் நந்தன் நீல்கேனி. இவர்தான் ஆதார் திட்டத்தின் செயல் அதிகாரியாக இருந்தவர். இவரது மதிப்பு 1.71 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் அடுத்த திட்டமான நிலவுக்கு விண்கலன் வடிவமைப்பதில் மிகப்பெரியத் தொகையை முதலீடு செய்து இருக்கிறார். 89-வது இடத்தில் இருக்கிறார்.

 சேனாதிபதி கோபாலகிருஷ்ணன்

சேனாதிபதி கோபாலகிருஷ்ணன்

இவரும் இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர். 2014-ல் ஓய்வு பெற்றுவிட்டார். இவரது சொத்து மதிப்பு 1.61 பில்லியன் டாலர்கள். ஓய்வு பெற்றுவிட்டாலும் சும்மா இல்லை. 60க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.

 விஜய் சேகர் சர்மா

விஜய் சேகர் சர்மா

நமது மொபைல்களில் இருக்கும் பே.டி.எம் நிறுவனத்தின் அதிபர். 2011-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பணமதிப்பு இழப்பு சமயத்தில் மிகவும் உதவியாக இருந்தது. அப்போது எகிறியது விஜய் சேகர் சர்மாவின் கிராப். தற்போது 1.41 பில்லியன் டாலர்களோடு 99-வது இடத்தில் இருக்கிறார்.

English summary
India's top 100 richman's list is out. Here the top 10 tech giants in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X