For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 பேர் கடத்தல்.. சீனாவிற்கு ஹாட்லைன் மெசேஜ் அனுப்பிய இந்தியா.. அருணாச்சல் பிரதேசத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

குவகாத்தி: ஐந்து பேரைக் கடத்தியதாகக் கூறப்படும் தகவல்கள் தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் ஹாட்லைன் செய்தியை அனுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரெண் ரிஜிஜு தெரிவித்தார். சீனா இதற்கு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்

Recommended Video

    சீனாவிற்கு Hotline Message அனுப்பிய இந்தியா

    சீனா ராணுவம் லடாக் எல்லையில் அண்மைக்காலமாக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் பூடான் எல்லையிலும் அத்துமீறலில் ஈடுபட்டது. லடாக் எல்லையில் குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த சீன விரும்புகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளது. இரு தரப்பிலும் ராணுவம் குவிப்பால் பதற்றம் நீடிக்கிறது.

    மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சீனாவிடம் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிளில் படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

    யாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி!யாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி!

    சீனா கடத்தல்

    சீனா கடத்தல்

    அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறு ஊடுருவி 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்டது. எல்லைப் பகுதியில் உள்ள அப்பர் சுபன்ஶ்ரீ மாவட்டத்தின் நாச்சோ என்ற கிராமத்தில் இருந்து 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    கைது செய்வது இயல்பு

    கைது செய்வது இயல்பு

    பொதுவாக சீன ராணுவம் பொதுவாக காடுகளில் வேட்டைக்குச் செல்லும் மக்கள் கணிக்க முடியாத நிலையில் எல்லையைக் கடந்து செல்லும் போது அவர்களை கைது செய்து அழைத்து சென்றுவிடுவார்கள். அதன்பின்னர் அவர்களை சீன விடுவித்து வருவது சகஜமான ஒன்று என்று கூறப்படுகிறது.

     ராணுவத்துக்கு தெரியாது

    ராணுவத்துக்கு தெரியாது

    இந்நிலையில் இந்த முறை காணாமல் போன 5 பேர் குறித்து எல்லை ராணுவ அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. 5 பேர் காணாமல் போன நாச்சோ என்ற கிராமத்தில் 400 பேர்தான் வசிக்கின்றனர். இப்படி கடந்த மாதம் கடத்திய ஒருவரை பிற்பாடு பேச்சுவார்த்தைக்குப்பிறகு சீன ராணுவம் விடுவித்தது.

    ஹாட் லைன் மெசேஜ்

    ஹாட் லைன் மெசேஜ்

    எனவே ஐந்து பேர் கடத்தப்பட்டது குறித்து அறிய சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவ ஹாட்லைன் செய்தியை அனுப்பியுள்ளது. அதன் பதிலுக்காக காத்திருக்கிறது. இந்த தகவலை கிரெண் ரிஜிஜு தெரிவித்தார். இதனிடையே கடத்தப்பட்ட குழுவில் இருந்து 2 பேர் தப்பித்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே 5 பேர் கடத்தப்பட்ட விவகாரம் வெளியே வந்துள்ளது.

    கடத்தப்பட்டவர்கள் விவரம்

    கடத்தப்பட்டவர்கள் விவரம்

    டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என ஐந்து பேர் கடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தாகின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

    English summary
    uion minister Kiren Rijiju on Sunday said that The Indian Army has already sent hotline message to the counterpart PLA establishment at the border point in Arunachal Pradesh. Response is awaited
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X