For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்ற தமிழர்கள் தமிழகத்தில் ஊடுருவல்: ஜனாதிபதியிடம் சு.சுவாமி புகார்

By Mathi
Google Oneindia Tamil News

India should side with Shiites in Shia-Sunni war in Iraq: Subramanian Swamy
டெல்லி: ஈராக் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்தி போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது:

இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக எனக்குத் தெரியவந்துள்ள விவரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன்.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஈராக் அரசுக்கு இந்தியா உதவ வேண்டும். ஷியா- சன்னி முஸ்லிம்களிடையேயான இந்த யுத்தத்தில் இந்தியா, ஷியா முஸ்லிம்களையே ஆதரிக்க வேண்டும்.

ஈராக் அரசுக்கு உதவும் அதே நேரத்தில் இஸ்ரேலுடனுனான பழைய நட்புறவையும் மேற்கொள்ள வேண்டும்.

ஈராக்கில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் தமிழகத்துக்குள் அதிக அளவில் ஊடுருவியுள்ளனர். இந்த விவகாரத்தைக் கையாள கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அண்மையில் தமிழக முஸ்லிம்கள் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளனர். எனவே தீவிரவாதிகள் ஊடுவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பின் 256-ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

English summary
BJP leader Subramanian Swamy on Thursday opined that the India should take side with the Shiite community in the ongoing Shia-Sunni war in Iraq. Speaking to ANI, Swamy termed the ongoing crisis in Iraq as 'a global Shia-Sunni war' and said that India should side with the Shiites as they have been friendly tow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X