For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா - இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இரு நாட்டு அரசுகள் ஒப்புதல்

இந்தியா - இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் முடிவுகள் செய்துள்ளன. இரு நாட்டு அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதம்பாலம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

India, Sri Lanka agree to release fishermen

இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இருநாட்டு உயர் அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா - இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் படகுகளை விடுவிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்கள் 85 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India and Sri Lanka on Wednesday agreed to release all Indian and Sri Lankan fishermen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X