For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் நெருக்கடி எதிரொலி: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் மத்திய அரசு?

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தக் கூடும்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்தது அமெரிக்கா. இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என மிரட்டி வருகிறது அமெரிக்கா.

India to stop import of Iranian oil?

அமெரிக்கா கொடுத்து வரும் கடும் நெருக்கடியால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்தாலோ அல்லது நிறுத்த நேரிட்டாலோ நிலைமையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் ரிலையன்ஸ் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படும். மங்களூரு ரிபைனரீஸ், ஐஓசி ஆகியவையும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

English summary
Indian oil ministry has asked refiners to prepare for a drastic reduction or stop imports of Iranian oil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X