For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிரிகளின் ரேடார்களை அழிக்கும்...கதிர் வீச்சுக்கு எதிரான ஏவுகணை...ருத்ரம் பரிசோதனை வெற்றி!!

Google Oneindia Tamil News

பாலசோர்: எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் கதிர் வீச்சுக்கு எதிரான ருத்ரம் ஏவுகணை சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை மேம்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பாலசோர் என்ற இடத்தில் இன்று சோதித்து பார்க்கப்பட்டது. இங்கு நிறுத்தபட்டு இருந்த சுகோய் 30 போர் விமானத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது.

India successfully test-fires DRDOs Rudram Anti-Radiation missile

இந்த ஏவுகணை சோதனைக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்கார் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில், ''புதிய தலைமுறை கதிர்வீச்சு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை உள்நாட்டில் மேம்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் வெற்றிக்கு பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை பல்வேறு உயரங்களில் இருந்தும் அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை ரேடாரில் பார்க்க முடியாது. எதிரி நாடுகள் இந்த ஏவுகணையை கண்டறிந்து அழிக்கவும் முடியாது. மேலும், வேறு எந்த தகவல் தொடர்புகள் வாயிலாகவும் பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India successfully test-fires DRDO's 'Rudram' Anti-Radiation missile
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X