For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிரிகள் ஏவுகணையை நடுவானில் மறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

By Siva
Google Oneindia Tamil News

India successfully test-fires new interceptor missile
பலசூர்: ஒடிஷாவின் வீலர் தீவில் புதிய ரக ஏவுகணையை இந்தியா இன்று காலை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இன்று காலை 9.06 மணிக்கு புதிய ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை எதிரி நாட்டு ஏவுகணை மற்றும் விமானங்களை நடுவானில் மறித்து தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது.

ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் டிஆர்டிஓவின் செய்தித் தொடர்பாளர் ரவி குமார் குப்தா கூறுகையில்,

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அது தனது இலக்கை சரியாகத் தாக்கியது என்றார்.

முன்னதாக டிஆர்டிஓ இது போன்ற 6 ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அதிக உயரத்தில் இலக்கை தாக்கும் வகையில் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தாக 100 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்குவதே தற்போது இலக்காக உள்ளது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
India on Sunday successfully test-fired a new interceptor missile capable of neutralizing any incoming long-range missile at higher altitude. The interceptor, positioned at launch pad-IV of Integrated Test Range at Wheeler Island, about 100 km from here, roared into the sky at about 9.10am to hit its target.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X