For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

800 கி.மீ. இலக்கை துல்லியமாக தாக்கும் சவுரியா ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி

Google Oneindia Tamil News

புவனேஸ்வரம்: அதிக தூர இலக்கைத் தாக்கும் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

800 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பூமியிலிருந்து இலக்கை துல்லியமாக தாக்கும் சவுரியா என்ற புதிய ஏவுகணையைத் தயாரித்துள்ளது.

India successfully test fires Shaurya missile

அணு ஆயுதத்தைச் சுமந்து கொண்டு 800 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணையின் சோதனை ஒடிஸாவின் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூரில் இருந்து வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

ஒலியை விட வேகமாக செல்லக் கூடிய இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும். இந்த சவுரியா ஏவுகணை சாகரிகா ஏவுகணையின் நிலப்பதிப்பு என நம்பப்படுகிறது. இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ட்ரம்ப்... என்ன மருந்து கொடுக்கிறார்கள் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ட்ரம்ப்... என்ன மருந்து கொடுக்கிறார்கள்

இந்த ஏவுகணை மிகவும் இலகுவாக இருக்கும். ஏற்கெனவே உள்ள சவுகரியா ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது இதை எளிதில் இயக்கலாம். இது ஹைபர்சோனிக் வேகத்தை கொண்டிருக்கிறது.

English summary
India successfully test fires Shaurya missile which could attack at around 800 kms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X