For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒலியை விட 6 மடங்கு ஸ்பீட்.. இனி ஹைப்பர்சோனிக் வேகத்தில் தாக்கலாம்.. இந்தியா உருவாக்கிய HTDV -பின்னணி

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: இந்தியாவில் சுயமாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட் கேரியர் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் சென்று இந்த ராக்கெட் கேரியர் சாதனை படைத்து உள்ளது. ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் ( Hypersonic Test Demonstrator Vehicle) என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை தற்போது இந்தியா சுயமாக உருவாக்கி உள்ளது.

Recommended Video

    ஒலியை விட 6 மடங்கு வேகம் கொண்ட Hypersonic Vehicle

    உலகிலேயே வெகு சில நாடுகள் மட்டுமே சொந்தமான ஹைப்பர்சோனிக் ராக்கெட்டுகளை தயாரித்து உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாட்கள் ஹைப்பர்சோனிக் ராக்கெட்டுகளை தயாரித்து உள்ளது. இந்தியா சொந்தமாக இதுவரை ஹைப்பர்சோனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை தயாரித்தது இல்லை.

    இந்த நிலையில் இன்று ஒடிசாவில் எச்டிடிவி (HTDV ) எனப்படும் ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் ( Hypersonic Test Demonstrator Vehicle) சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்தது. ஒடிசாவில் இருக்கும் அப்துல்கலாம் சோதனை மையத்தில் இந்தியா இந்த சோதனையை செய்துள்ளது. ரஷ்யா, சீனா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இந்த சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது.

    சீனாவின் கண்ணில் மண்ணை தூவி.. Leh-வில் இந்தியா அமைத்த 280 கிமீ சாலை.. யாராலும் கண்டுபிடிக்க முடியாதுசீனாவின் கண்ணில் மண்ணை தூவி.. Leh-வில் இந்தியா அமைத்த 280 கிமீ சாலை.. யாராலும் கண்டுபிடிக்க முடியாது

    ஹாப்பர்சோனிக் என்றால் என்ன

    ஹாப்பர்சோனிக் என்றால் என்ன

    எச்டிடிவி குறித்து தெரிந்து கொள்ளும் முன் ஹாப்பர்சோனிக் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் தொழில்நுட்பம்தான் ஹாப்பர்சோனிக் ஆகும். அதாவது மேக் 6 வேகத்தில் செல்வதை ஹாப்பர்சோனிக் என்று கூறுவார்கள். உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் இந்த ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

    எச்டிடிவி என்றால் என்ன?

    எச்டிடிவி என்றால் என்ன?

    எச்டிடிவி (HTDV ) என்பதை ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் ( Hypersonic Test Demonstrator Vehicle) என்று அழைப்பார்கள். எச்டிடிவி என்பது ஹாப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் scramjet எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். இதைத்தான் இந்தியா தற்போது வெற்றிகரமாக ஒடிசாவில் சோதனை செய்துள்ளது. இதன் மூலம் ஹாப்பர்சோனிக் வேகத்தில் ஏவுகணைகளை செலுத்த முடியும். அதேபோல் ஹாப்பர்சோனிக் வேகத்தில் விண்ணில் செயற்கைகோள்களை செலுத்த முடியும். குறைவான விலையில் விண்ணில் செயற்கைக்கோளை அனுப்ப முடியும்.

    மீண்டும் பயன்படுத்த முடியும்

    மீண்டும் பயன்படுத்த முடியும்

    அதோடு இந்த எச்டிடிவி வகை ஹாப்பர்சோனிக் ராக்கெட் கேரியர்களை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எச்டிடிவி (HTDV) சோதனை தற்போது வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. சரியான திசையில் செல்லுதல், சரியான வேகத்தை அடைத்தல் என்று அனைத்து விதமான இலக்குகளையும் இந்த சோதனையில் எச்டிடிவி (HTDV) அடைந்துள்ளது.

    ஏவுகணைகளை உருவாக்க முடியும்

    ஏவுகணைகளை உருவாக்க முடியும்

    இந்த வெற்றி காரணமாக இந்தியா இனி scramjet எஞ்சின்களை கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்க முடியும். தற்போதைய சோதனை டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தலைமையிலான குழு மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையை அக்னி ஏவுகணை பூஸ்டர் உதவியுடன் செய்து இருக்கிறார்கள். இன்று காலை 11.03 மணிக்கு சோதனை நடந்துள்ளது.

    வெற்றிகரமாக பறந்தது

    வெற்றிகரமாக பறந்தது

    முதலில் எச்டிடிவியை (HTDV) தாங்கிக் கொண்டு 30 கிமீ தூரம் வரை அக்னி ஏவுகணை பூஸ்டர் சென்றுள்ளது. அதன்பின் அக்னி பிரிந்த பின், எச்டிடிவி (HTDV) கேரியரில் இருக்கும் scramjet செயல்பட்டு, 20 நொடிகள் பறந்துள்ளது. 20 நொடிகள் ஹைப்பர்சோனிக் வேகத்தில் இந்த எச்டிடிவி (HTDV) விண்ணில் பறந்துள்ளது. அதாவது மேக் 6 வேகத்தில் சரியான திசையில் இந்த எச்டிடிவி (HTDV) பறந்து உள்ளது.

    என்ன வெப்பநிலை

    என்ன வெப்பநிலை

    அதிலும் 2500 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை தாக்குப்பிடித்து சேதம் அடையாமல் இந்த எச்டிடிவி (HTDV) விண்ணில் பறந்துள்ளது. அக்னி ஏவுகணையில் இருந்து மிக சரியாக பிரிந்து தானாக எச்டிடிவி இயக்கப்பட்டு, ஹைப்பர்சோனிக் வேகத்தை இந்த ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் எட்டி உள்ளது. கடந்த வருடமே இதன் முதல்கட்ட சோதனை வெற்றிபெற்ற இந்தியா தற்போது முழு சோதனையில் வெற்றிபெற்றுள்ளது.

    சாத்தியம்

    சாத்தியம்

    இந்த ஹாப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் ஒரு ஏவுகணை தாங்கி, செயற்கைகோள் தாங்கி போல செயல்படும். இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் ஏவுகணைகளை ஏவ முடியும். அதேபோல் செயற்கைகோள்களை செலுத்த முடியும். முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் ரஷ்யா இதில் முக்கியமான தொழில்நுட்ப உதவிகளை இந்தியாவிற்கு செய்துள்ளது.

    English summary
    India successfully testes Hypersonic Test Vehicle: All you need to know about HTDV tech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X