For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாடு இந்தியா- ராம்நாத் கோவிந்த்

உலகிலேயே பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாடு இந்தியா மட்டுமே என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 112 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

India the only place where women are safe: President Kovind

இதில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது குறித்து உலக நாடுகள் அனைத்தும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார் ராம்நாத் கோவிந்த்.

இந்தியாவில் பெண்கள் நினைத்தால் கிராமப்புற வளர்ச்சியை விரைந்து அடைய முடியும். பெண்கள் தங்களுக்கு இருக்கும் பாரம்பரியமான தடைகளை நாளுக்கு நாள் தகர்த்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

தற்போது இந்தியப் பெண்கள் பல சவால்களைக் கடந்து விமானிகளாகும் அளவிற்கு வந்திருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் உலகிற்கே முன்னுதாரணமாக உருவாக வேண்டும்.

இந்தியா மட்டுமே பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாடு என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

English summary
Addressing a gathering of women achievers at Rashtrapati Bhavan, President Ram Nath Kovind on Saturday said India is the only place where women are safe. Indian women are now flying fighters and progressing despite several challenges, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X