For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

38 நாடுகளுக்கு ராணுவ பயிற்சி- ஆயுதங்களும் வழங்குவோம்: பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்

By Mathi
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: 38 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

ஒடிஷாவின் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் மனோகர் பாரிக்கர் கூறியதாவது:

India to train defence personnel of 38 countries

38 நாடுகள் தங்களது ராணுவ வீரர்களை பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றனர். நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம்.

அவர்கள் பயிற்சிக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். நாங்கள் ஏற்றுமதி மூலம் குறிப்பிட்ட அளவு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் பரிசீலனை செய்து வருகிறோம்.

பாதுகாப்பு காரணமாக எந்தெந்த நாடுகள் பயிற்சிக்காக தங்களது நாட்டு ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பியது என்பதை தெரிவிக்க முடியாது.

நாம் நமது நிலையை மிகவும் வலிமையாக கட்டுவோம். இந்தியா எந்தஒரு நாட்டிடமும் ஆதிக்கம் செலுத்த விரும்பாது, நட்புறவு மூலம் தனது பலத்தை அதிகரிக்கும்.

நாங்கள் விசாகப்பட்டிணத்தில் ஒரு கடற்படை பயிற்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளோம்... இதில் சர்வதேச கடற்படை பங்கேற்க உள்ளது. உள்கட்டமைப்பு பயிற்சி அடிப்படையில் இது ஒரு கண்கவர் நிகழ்ச்சியாக இருக்கும். இதில் சீனாவும் பங்கேற்க அழைப்பு விடுப்போம்.

இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறீனார்.

English summary
Defence Minister Manohar Parrikar on Sunday said India was planning to export defence materials and training military personnel of at least 38 countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X