For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்.. ஆக்சனுக்கு தயாரான இந்திய விமானப்படை.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

லடாக்: பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருவதால் இந்தியா தனது எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தனது கவனத்தை திருப்பி உள்ளது.

இந்தியா - சீனா இடையே எல்லையில் தீவிரமான மோதல் நிகழ்த்து வருகிறது. பெரிய நெருப்புக்கு முன் வரும் புகை போல இரண்டு நாடுகளும் தற்போது அமைதியாக எல்லையில் படைகளை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த புகை காட்டுத்தீயாக மாறலாம் . இந்த சூடான புகையில் தற்போது பாகிஸ்தான் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த மோதலை பயன்படுத்தி காஷ்மீரில் வேலையை காட்ட பாகிஸ்தான் தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த சில தினங்களாகவே பாகிஸ்தான் காஷ்மீரில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இந்தியா தாக்க வாய்ப்புள்ளது? மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. பாக். ராணுவ ஜெனரல் உத்தரவு.. ஷாக்! இந்தியா தாக்க வாய்ப்புள்ளது? மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. பாக். ராணுவ ஜெனரல் உத்தரவு.. ஷாக்!

என்ன மாதிரியான திட்டம்

என்ன மாதிரியான திட்டம்

இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் இருந்து சீனாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானில் களமிறங்கி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஸ்கர்டு பகுதியில் உள்ள விமான படைத்தளத்தில் சீனாவின் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து இந்த இடம் மிக சொற்ப தூரத்திலேயே இருக்கிறது.

வேறு எங்கு

வேறு எங்கு

அதேபோல் லடாக்கில் இன்னொரு பக்கத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீரின் வான் பகுதியிலும், சீனா ஆக்கிரமித்து இருக்கும் லடாக்கின் வான் பகுதியிலும் சீனாவின் போர் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. பாகிஸ்தானின் விமான பரப்பை சீனாவின் போர் விமானங்கள் பயன்படுத்திக் கொண்டு அங்கே ரோந்து பணிகளை செய்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சீனாவிற்கு துணை போய் உள்ளது.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுக்குள் சீனாவின் படைகளும் களமிறக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் லடாக்கில் கவனம் செலுத்தும் சீனா இன்னொரு பக்கம் பாகிஸ்தான் உதவியோடு காஷ்மீரிலும் அத்துமீற நினைக்கிறது. லடாக் அருகே இருக்கும் சீனாவின் ஹோட்டான் விமான படைத்தளத்தில் இந்த வாரம் மட்டும் 27 சுகோய் விமானங்களை சீனா களமிறக்கி உள்ளது.

திபெத் அருகே

திபெத் அருகே

அதேபோல் திபெத் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை வைத்து மிக தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. பாகிஸ்தானின் ஸ்கர்டு விமானப்படை தளம் என்பது பாகிஸ்தான் கீழ் வரும் லே அருகே உள்ள இன்னொரு விமானப்படை தளத்தில் இருந்து 100 கிமீ தொலைவில்தான் இருக்கிறது. இந்த விமானப்படை தளத்திலும் சீனா தனது போர் விமானங்களை களமிறக்கி உள்ளது.

இந்தியா தயார்

இந்தியா தயார்

இதனால் இந்திய விமானப்படையும் அதிரடி ஆக்சனுக்கு தயார் ஆகியுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீர் அருகே இந்திய விமானப்படையும் போர் விமானங்களை களமிறக்கி உள்ளது. இந்தியாவின் மிக் 21 உட்பட பல்வேறு வகையான மிக் விமானங்கள், சுகோய் விமானங்கள், எப்16 டைனமிக்ஸ், சாப் ஜாஸ் 39, HAL HF-24 மருத் ஆகிய விமானங்களை இந்தியா எல்லையில் களமிறக்கி உள்ளது.

தீவிர ரோந்து

தீவிர ரோந்து

சீனாவின் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் என்ன செய்கிறது. என்ன மாதிரியான திட்டங்களையே வகுக்கிறது என்று இந்திய விமானப்படை தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. பாகிஸ்தான், சீன விமானங்கள் எதுவும் இந்திய எல்லைக்குள் நுழைய முடியாத அளவிற்கு அரண் போல இந்திய போர் விமானங்கள் காஷ்மீர் எல்லையிலும், லடாக் எல்லையில் தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

English summary
India turns its focus on Pakistan after China deploys its Air Force in Skardu base.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X