For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வலியுறுத்தியதே இந்தியா தான்: தூதரக அதிகாரிகள் தகவல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2011ம் ஆண்டு காமன்வெல்த் மாநாடு நடந்தபோது அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்த வலியுறுத்தியதே இந்தியா தான் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல கட்சிகள், தமிழ் அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை தனது நிலையை தெளிவாக தெரிவிக்கவில்லை.

Indian govt

இந்நிலையில் இது குறித்து தூதரக அதிகாரிகள் கூறுகையில்,

கடந்த 2011ம் ஆண்டு காமன்வெல்த் மாநாடு நடந்தபோது அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என்று இந்தியா தான் இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் போராடியது என்றனர்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பிரதமர் விரைவில் முடிவு எடுப்பார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
Diplomats said that when India attended the commonwealth summit held in 2011 it fought hard with UK, Australia and Canada to make sure that the next one is organised in Colombo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X