For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி கடினமானவர்.. அவரிடம் டீல் செய்ய முடியாது.. ஆனாலும் ஒப்பந்தம் போடுவோம்.. டிரம்ப் பேச்சு!

நாளை நாம் 3 பில்லியன் டாலர் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் போடப் போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இந்தியா அமெரிக்கா இடையில் நாளை 3 பில்லியன் டாலர் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Recommended Video

    Trump India Visit|டிரம்ப்பின் இந்திய வருகை... பின்னணி என்ன ?

    நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி உலகம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதையடுத்து அகமதாபாத்தில் இந்த நமஸ்தே டிரம்ப் விழா நடைபெற்றது.

    இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்கள் முன்னிலையில் பேசினார்கள்.

    அடிக்கடி பேசிய வள்ளுவரை காணோம்.. 2 நாள் முன்னாடி புகழ்ந்த அவ்வையாரை காணோம்.. தமிழை மறந்துட்டாரா மோடிஅடிக்கடி பேசிய வள்ளுவரை காணோம்.. 2 நாள் முன்னாடி புகழ்ந்த அவ்வையாரை காணோம்.. தமிழை மறந்துட்டாரா மோடி

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    டிரம்ப் தனது பேச்சில், இந்த பயணத்தில் எந்த விதமான ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்று செய்திகள் வெளியானது. முக்கியமாக வர்த்தகம் தொடர்பாக எந்த விதமான ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்று செய்திகள் வந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தில் செய்யப்பட உள்ள ஒப்பந்தங்கள் குறித்து பேசினார். அதில், இந்தியாவிற்காக மோடி உழைப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

    என்ன உழைப்பு

    என்ன உழைப்பு

    உங்கள் உழைப்பிற்கு நன்றி. அமெரிக்காவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவுடன் உறவை வளர்க்கவே நான் இங்கே வந்து இருக்கிறேன். இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமை அடையும் இதனால். இந்தியாவும் அமெரிக்காவும் டைகர் டிரையம்ப் என்று ஒன்றாக சேர்ந்து ராணுவ பயிற்சி எடுத்தது. இதன் பின் இரண்டு நாட்டு உறவு வலிமை அடைந்தது.

    ராணுவம் எப்படி

    ராணுவம் எப்படி

    ராணுவ ரீதியாக நாம் ஒன்றாக சேர்ந்துள்ளோம். தற்போது பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நாம் ஒன்று சேர போகிறோம். நாளை நாம் 3 பில்லியன் டாலர் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் போடப் போகிறோம். இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு புதிய பலம் பெறும். வர்த்தக ஒப்பந்தம் செய்ய எங்களுக்கும் ஆர்வம் இருக்கிறது.

    நடக்கும்

    நடக்கும்

    விரைவில் அந்த ஒப்பந்தம் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறோம். பிரதமர் மோடி மிகவும் கடினமான நபர். அவரிடம் பேசுவது கடினம். இரண்டு நாடுகளும் ஒன்றாக வளர்வது முக்கியம். அவரிடம் கண்டிப்பாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவேன். அவர் இந்தியாவிற்கு நிறைய செய்து இருக்கிறார். உலகத்திற்கும் இதேபோல் நிறைய மறுமலர்ச்சி திட்டங்கள் வர வேண்டும், என்று

    English summary
    India, US to Sign 3 billion dollar Defence Deal tomorrow says, Trump in Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X