For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கடும் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 India will never get bogged down by such cowardly act: Modi on Amarnath Yatra attack

இதில் 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும், 15-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அமர்நாத் யாத்தரீகர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம் இது.

இந்தியா, யாருக்கும் அடிபணியாது. என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா, நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

English summary
Prime Minsiter Narendra Modi condemned the attack that took place in Anantnag on Amarnath Yatra pilgrims. Condemning the incident, Modi tweeted that India will never get bogged down by such cowardly attacks & evil designs of hate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X