For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தலை.. உடல் உறுப்புகளும் பாதிக்கலை.. 90 வயதில் இறந்த அதிசய சாமியார்

Google Oneindia Tamil News

காந்தி நகர்: பல ஆண்டுகளாக உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்து வந்த குஜராத் சாமியார் பிரகலாத் ஜனி நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் ஜனி. இவர் நீண்ட தாடி வைத்திருப்பதோடு, சிகப்பு நிற ஆடை அணிந்திருப்பார். இந்து பெண் கடவுளை போன்று மூக்கில் வளையம் போன்ற மூக்குத்தியை அணிந்திருப்பார்.

இவர் சரடா கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு யோகா மற்றும் தியானம் செய்து வந்தார். அவர் 1929ஆம் ஆண்டு பிறந்தவர் என கூறப்படுகிறது. இவருக்கு நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை நள்ளிரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

படையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க!படையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க!

சிறிய ஆசிரமம்

சிறிய ஆசிரமம்

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் அம்பாஜி நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் சிறிய ஆசிரமத்தை கட்டியுள்ளார். அவர் பெண் கடவுளாக அறியப்படுகிறார். பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக ஆசிரமத்தில் அவரது உடல் இரு நாட்களுக்கு வைக்கப்படும்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

அவர் குழந்தையாக இருந்த போது பெண் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என கூறுவதுண்டு. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அவர் தண்ணீர், உணவு அருந்தாமல் இத்தனை ஆண்டுகள் எப்படி வாழ்ந்தார் என மருத்துவர்களே ஆச்சரியப்படுகிறார்கள். ஒருவரால் உணவு, தண்ணீர் இல்லாமல் இத்தனை காலத்திற்கு எப்படி வாழ முடிந்தது என மருத்துவர்களுக்கே தெரியவில்லை.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

அதுவும் அவர் உணவு உட்கொள்ளாததால் அவரது உடல் உறுப்புகள் எந்த பாதிப்பையும் அடையவில்லை. உடல்நல பாதிப்பே ஏற்படவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு இரு வாரங்களுக்கு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்தனர்.

கொப்பளித்தல்

கொப்பளித்தல்

அறையில் உள்ள கேமரா மற்றும் தொலைகாட்சி மூலம் அவரை கண்காணித்தனர். அப்போது அவரது இதயம், நுரையீரல், நினைவுத் திறன், மூளை ஆகியவை குறித்த சோதனைகள் மேற்கொண்டனர். அவர் எந்த உணவையும் உண்ணவில்லை, தண்ணீர் அருந்தவில்லை, கழிப்பறைக்கும் செல்லவில்லை, அவர் குளிக்கும்போது வாய் கொப்பளிக்கும்போது மட்டுமே தண்ணீரை பயன்படுத்தினார்.

வேதனை

வேதனை

அவர் இத்தனை நாட்கள் எப்படி உயிரோடு இருந்தார் என்பதே எங்களுக்கு இன்னமும் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் தனது 90 ஆவது வயதில் மறைந்தார். இவரது இறப்பால் அவரது பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.

English summary
Indian yogi who lives without food and water for more decades died at the age of 90 in Gujarat. He was famous for his nose ring.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X