For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்த்தது இந்திய விமானப்படை… எல்லையில் பதற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆத்திரத்தில் ஜெய்ஷ் இ முகமது | காஷ்மீரில் பதற்றம்- வீடியோ

    ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பழிதீர்த்து உள்ள நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி தர இந்திய ராணுவம் தயாராக இருந்தது.

    இந்த நிலையில், ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறைகளை குண்டு வீசித் தகர்த்தது இந்திய விமானப்படை .

     முகாம் அழிப்பு

    முகாம் அழிப்பு

    எல்லைக்கோட்டு பகுதியான பாலகோட், சாக்ஜோதி, முஷாரா பாத்தில் உள்ள தீவிரவாத நிலைகளை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தது. இந்தியாவின் மிரோஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டுள்ளது.

     அதிரடி சோதனை

    அதிரடி சோதனை

    ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் வீட்டில் தேசிய பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

     காஷ்மீரில் பதற்றம்

    காஷ்மீரில் பதற்றம்

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35A -வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் காஷ்மீரில் பதற்றம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     யாசின் மாலிக் கைது

    யாசின் மாலிக் கைது

    நட்புறவு காட்டும் இடத்தில் இந்தியா தாய்க்கு இணையாகவும் எதிரியாக பாவிக்கும் இடத்தில் பேய்க்கு இணையாகவும் இந்தியா மாறும் என்பதற்கு இது இரண்டாவது உதாரணம் ஆகும். இந்த தாக்குதல் மூலம் 40 வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

     வீடுகளில் சோதனை

    வீடுகளில் சோதனை

    ஸ்ரீநகரில் உள்ள மைசூமா பகுதியின் யாசின் மாலிக் வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை தொடர்ந்து மற்ற பிரிவினைவாதத் தலைவர்களான அகமது கான் உள்ளிட்ட 12 நிர்வாகிகள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது இதனால் அவர் வீட்டைச்சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    English summary
    Srinagar: the residence of JKLF chief Yasin Malik where NIA is conducting a raid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X