For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய ராணுவம்.. அதிகாலையில் அதிரடி தாக்குதல்

இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

காஷ்மீர்: இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரும் இதில் மரணம் அடைந்தார்.

Indian Army crosses LOC and attacks on Paskitan force

இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. பத்து பேர் கொண்ட இந்திய சிறப்பு ராணுவ படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தியது.

இதில் மூன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவ வீரர்கள் யாருக்கும் இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் பூன்ச் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவத்தின் உள்ளூர் படையால் நடத்தப்பட்டு இருக்கிறது. சரியாக இந்த நபர்களின் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என முடிவு செய்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ராணுவ தரப்பு கூறியிருக்கிறது.

இந்த தாக்குதல் 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' கிடையாது என்றும் ராணுவம் விளக்கம் அளித்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரே குறிக்கோளுடன் நடத்தப்பட்ட 'செலக்டிவ் டார்கெட்' அட்டாக் என்று ராணுவ தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.

English summary
Indian Army crosses LOC and attacks on Paskitan force. More than 10 soldiers participated in this operation. This operation has carried out early morning. They have formed a special unit for this attack. Last Saturday four Indian soldiers including were killed by Border Action Team of the Pakistan Army in Rajouri, India took revenge from this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X