• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிழக்கு லடாக்கில் முழு அளவிலான போருக்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்.. சீனாவுக்கு எச்சரிக்கை

|

ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட முழு அளவிலான போரை நடத்த இந்தியா முழுமையாக தயாராக உள்ளது என்று கூறிய இந்திய ராணுவம், சீனா போருக்கான நிலைமைகளை உருவாக்கினால், அவர்கள் ஒரு சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயாராக உள்ள , முழுமையாக அமைதியுடன் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வடக்கு ராணுவ கமாண்டக தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

உடல் மற்றும் உளவியல் ரீதியாக போரிடும் இந்திய வீரர்களை ஒப்பிடும்போது, சீன ராணுவ வீரர்கள்பெரும்பாலும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கடினமான சூழலை எதிர் கொண்டவர்கள் இல்லை என்றும் ராணுவ அதிகாரி கூறினார்.

இந்தியாவின் செயல்பாட்டு நிலையில் ராணுவ தளவாடங்கள் போதுமான அளவில் தயாரிக்கப்படவில்லை என்றும், இந்திய வீரர்களால் குளிர்காலத்தில் திறம்பட போராட முடியாது என்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவத்தின் வடக்கு காமாண்டக செய்திதொடர்பாளர் கூறினார்.

சீனா ஊடுருவல்: நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டம்

சீனர்களின் அறியாமை

சீனர்களின் அறியாமை

இது தொடர்பாக அவர் கூறுகையில். சீன ஊடகத்தின் அறிக்கை எனப்து அவர்களின் அறியாமைக்கு சிறந்த உதாரணமாக இருக்கலாம். கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட இந்திய இராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. முழு அளவிலான போரை நடத்தும் திறன் கொண்டது. ஆனால் இந்தியா அமைதியை விரும்பும் நாடு, அண்டை நாடுகளுடன் நல்ல உறவு கொள்ள விரும்புகிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா எப்போதும் விரும்புகிறது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கையில், இராணுவ மட்டத்தில் அது நீண்டகால நிலைப்பாட்டிற்கும் நன்கு தயாராக உள்ளது .

வெப்பநிலை மைனஸ் 40

வெப்பநிலை மைனஸ் 40

லடாக்கில் மிக உயரமான பல மலைகள் உள்ளன. இங்கு நவம்பருக்குப் பிறகு 40 அடி வரை பனிகட்டிகள் தரையை ஆக்கிரமித்து விடும். இதனுடன் வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துவிடும். இது ஒரு வழக்கமான நிகழ்வு. காற்றின் குளிர்ச்சியான சூழல் ராணுவத்திற்கு நிலைமையை இன்னும் மோசமாக்கும். பனி காரணமாக சாலைகளும் மூடப்படுகின்றது ஆனால் இவை அனைத்தையும் மீறி, இந்திய படையினருக்கு மிகவும் ஊக்கமளிக்கும் பகுதி என்னவென்றால், இந்திய வீரர்கள் குளிர்கால யுத்தத்தின் பெரும் அனுபவத்தைக் கொண்டுள்ளனர், மேலும் குறுகிய அறிவிப்பில் செயல்பட உளவியல் ரீதியாக சரிசெய்யப்பட்டுள்ளனர். இந்த உண்மைகள் உலகுக்கு தெரிந்திருந்தாலும், செயல்பாட்டில் உள்ள ராணுவ தளவாட திறன்கள் குறித்து சரியாக அறியப்படவில்லை.

தரமான சேவைகள்

தரமான சேவைகள்

லாஜிஸ்டிக் திறன் இயக்கம், வாழ்விடம் மற்றும் பில்லிங், ஆரோக்கியத்திற்கான தரமான சேவைகள், சிறப்பு ரேஷன்கள், பழுது மற்றும் மீட்பு, வெப்ப அமைப்புகள், உயர்தர ஆயுதங்கள், வெடிமருந்துகள், தரமான ஆடை மற்றும் பல விஷயங்கள் சிறப்பாக உள்து. இவற்றில் பெரும்பாலானவை முன்னர் இருந்ததைவிட இப்போது அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மே முதல் சீனா ஆக்கிரமிப்பு அறிகுறிகளுக்கு பின்னர் அதிரடியாக நிறைய உயர்த்தப்பட்டுள்ளது.உலகில் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அனுபவத்தை இந்திய இராணுவம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 புதிய சாலை

புதிய சாலை

பாரம்பரியமாக லடாக்கிற்கு செல்ல இரண்டு வழிகள் இருந்தன, அதாவது சோஜிலா (ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை) மற்றும் ரோஹ்தாங் பாஸ்கள் (மணாலி-லே) வழியாக. அண்மையில் இந்தியா தர்ச்சாவிலிருந்து லே வரை மூன்றாவது சாலையை அமைத்தது, இது மிகக் குறைந்த தூரம் உள்ளது, இந்த சாலை மூடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு . ரோஹ்தாங் பாதையில் அடல் சுரங்கப்பாதையை நிறைவு செய்வது தளவாட திறன்களை இந்தியா பலப்படுத்தியுள்ளது.

நவீன பனி அகற்றும் கருவி

நவீன பனி அகற்றும் கருவி

இத்துடன் கூடுதலாக, எங்களிடம் ஏராளமான விமான தளங்கள் உள்ளன, இதன் உதவியுடன் இராணுவத்தை சிறப்பாக பராமரிக்க முடியும். நவம்பர் மாதத்திற்கு அப்பால் திறந்திருக்கும் வகையில் நவீன பனி அகற்றும் கருவிகளும் இந்த பாதைகளில் வைக்கப்பட்டுள்ளன, இதனால் வீரர்களின் தினசரி ரோந்துக்க எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்

எரிபொருளும் உள்ளது

எரிபொருளும் உள்ளது

பீரங்கிக்கு தேவையான சிறப்பு எரிபொருள் மற்றும் கவசப் பணியாளர்கள் கேரியர்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன, அவற்றின் பராமரிப்புக்கான உதிரிபாகங்கள் உட்பட. அனைத்தும் உள்ளது. தண்ணீர் அருந்த குழாய் மற்றும் கிணறுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. நன்கு வசதியாகவும் மற்றும் சூடாக இருக்கும் அளவுக்கு லடாக் எல்லைப்பகுதியைஇந்தியா மாற்றி உள்ளது. வெப்பமாக்கி கொள்ளும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

சீன ஊடகம் கவலை

சீன ஊடகம் கவலை

சிறிய ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கி மற்றும் பீரங்கி வெடிமருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிமருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிகழ்விற்கும் மருத்துவ முறையும் உள்ளது. சீனா போருக்கான நிலைமைகளை உருவாக்கினால், அவர்கள் சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட, முழுமையாக அமைதியான மற்றும் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள்.இந்த கவலைகள் சீன துருப்புக்களின் மனதில் ஊடுருவி வருகின்றன, அவை சீன ஊடகங்களில் காணப்படுகின்றன" இவ்வாறு கூறினார்.

 
 
 
English summary
The Army' Northern Command headquarters assertions that it is fully prepared to fight a full-fledged war even in winters in eastern Ladakh, the Indian Army on Wednesday said if China created conditions for war, they will face a better trained, better prepared, fully rested and psychologically hardened Indian troops.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X