For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: செவ்வாய்க்கிழமையான இன்று, காஷ்மீரின் நவ்ஷாரா செக்டரில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷனட் அதிகாரி (ஜே.சி.ஓ) வீரமணரணம் அடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டையடுத்து, இப்பகுதி ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

Indian Army JCO killed in Jammu and Kashmir

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பிராந்தியத்தில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இந்த மோதல் ஏற்பட்டது.

சில நாட்கள் முன்பு, காஷ்மீரில் உள்ள டங்தார் செக்டார், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது

தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது இப்படி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பொது மக்கள் ஒருவரும் கொல்லப்பட்டார்.

அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

English summary
The killing of an Indian Army personnel has come a couple of days after Pakistan bombed Kashmir's Tangdhar area in which two security personnel and a civilian were killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X