For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ''பேட் தாக்குதல்''.. துரிதமாக செயல்பட்ட இந்திய ராணுவம்.. பரபரப்பு!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ''பேட் தாக்குதல்'' நடத்த முயற்சி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ''பேட் தாக்குதல்'' நடத்த முயற்சி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டு வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அங்கு 75000 வீரர்கள் புதிதாக குவிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் அங்கு சில நாட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

35ஏ சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நீக்க வாய்ப்புள்ளது, ஜம்மு காஷ்மீரை மத்திய அரசு பிரிக்க நினைக்கிறது என்று பல விஷயங்கள் இதற்கு காரணம் என்கிறீர்கள். ஆனால் அரசு தரப்பில், பாதுகாப்புதான் இந்த ராணுவ குவிப்பிற்கு காரணம். அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் நடக்க உள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ''பேட் தாக்குதல்'' நடத்த முயற்சி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்தியாவில் பிஎஸ்பி எனப்படும் பார்டர் செக்கியூரிட்டு போர்ஸ் - எல்லை பாதுகாப்பு படை இருக்கிறதோ, அதேபோல் பாகிஸ்தானில் பேட் எனப்படும் Border Action Team உள்ளது.

இவர்கள்

இவர்கள்

மற்ற நாட்டின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்துவதற்கு Border Action Team தான் எப்போதும் பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்படும். இந்த பேட் டீம் நடத்தும் தாக்குதலுக்கு பேட் தாக்குதல் என்று பெயர். இவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு காஷ்மீர் எல்லையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர், 5-7 பேட் டீம் வீரர்களை கொன்றனர். இதில் சில தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இதனால் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி வேகமாக முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குப்வாரா பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Indian army's BSP stopped an attack by BAT force of Pakistan in Kashmir last Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X