For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10,000 வீரர்கள்.. பல போர் விமானங்கள்.. இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு.. போர் பதற்றம்!

இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian Air Force: தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல்- வீடியோ

    இஸ்லாமாபாத்: இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து கடுமையான போர் பதற்றம் உருவாகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

    Indian army sends troops to the border against Pakistan after early morning attack

    அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. 12 விமானங்களோடு உள்ளே புகுந்த இந்திய விமானப்படை சரமாரி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

    இந்த அதிரடி தாக்குதலில் மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    எல்லை பகுதிகளில் தயார் நிலையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது, முதற்கட்டமாக 10000 ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தயார் நிலையில் ராணுவமும் குவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய விமானப்படை முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பல எண்ணிக்கையிலான விமானங்கள் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீர் மட்டுமின்றி அனைத்து எல்லையிலும் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

    English summary
    Indian army sends troops to the border against Pakistan after early morning attack by IAF.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X