For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லா விசாரிச்சுட்டு தான் குடியுரிமை கொடுப்போம்... சரியா... அஸ்ஸாமில் முழங்கிய மோடி

Google Oneindia Tamil News

சங்சாரி (அஸ்ஸாம்): மாநில அரசின் பரிந்துரை மற்றும் முறையான விசாரணைக்கு பின்பே, அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுககு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் சில திருந்தங்கள் கொண்டுவரப்பட்டு அந்த சட்டம் மக்களவையில் கடந்த ஜனவரி 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

Indian citizenship granted to the migrants only after necessary investigation: PM Modi

இதன்படி, பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, புத்தம், ஜெயின், கிறிஸ்து, சீக்கியம் மற்றும் பார்சிஸ் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு இருந்து இந்தியாவில் வசித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்த சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என
அஸ்ஸாமில் உள்ள மாணவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல்
நெருங்கிவிட்ட நிலையில் அஸ்ஸாம் மாநிலம் சன்ங்சாரியில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "முறையான விசாரணை மற்றும் மாநில அரசின் பரிந்துரைக்கு பின்னரே இந்திய குடியுரிமை வழங்கப்படும். அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவின் வளங்களை கைப்பற்றும் நோக்கில் இங்கு வந்தவர்களையும்,
அதே அண்டை நாட்டில் நிகழ்ந்த அட்டூழியங்கள் காரணமாக, வந்தவர்களையும் பிரித்து பார்க்க வேண்டும். மதத்தின் பேரில் துன்புறுத்தப்பட்டு அண்டை நாடுகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட அந்நாட்டின் சிறுபான்மையினரை காக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்பது அஸ்ஸாம் அல்லது வடகிழக்கு மாநிலங்களுடன் மட்டும் தொடர்புடையதல்ல. இந்தியாவின் ஏனைய பிற பகுதிகளில் வாழும், இந்தியாவின் மீது பற்று வைத்துள்ள, இந்தியாவை தாய் நாடாக நேசிக்க கூடிய மக்களுடனும் தொடர்புடையது. அவர்கள் பாகிஸ்தானில் இருந்தோ, வங்க தேசத்தில் இருந்தோ, ஏன் ஆப்கானிஸ்தானில்
இருந்தோ வந்திருந்தாலும் சரி, அவர்கள் இங்கு பாதுகாப்பாக வாழலாம். எனது அரசு அஸ்ஸாம் மாநில வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட்டு வருகிறது" இவ்வாறு கூறினார்.

முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு எதிராக அஸ்ஸாமில் மாணவ
அமைப்பினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினர். அப்போது Go Back Modi என மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

English summary
PM Modi explain Citizenship Bill. He says Indian citizenship will be granted to the migrants only after necessary investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X