For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க விமான படைத்தளத்திற்குள் காரை ஓட்டிச் சென்ற இந்தியர்.. சிலிண்டர்களில் மோதி மரணம்

நியூயார்க்கில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்திற்குள் இந்தியர் ஒருவர் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: நியூயார்க்கில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்திற்குள் இந்தியர் ஒருவர் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து உள்ளார். இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யபட்டது போல இருப்பதாக அமெரிக்க போலீஸ் தெரிவித்து வருகிறது.

நிறைய பாதுகாப்புகளை மீறி, கார் முழுக்க கேஸ் சிலிண்டர்களுடன் ஹபீஸ் காசி என்று அந்த இந்தியர் விமான படை தளத்திற்குள் நுழைந்து இருக்கிறார். இதற்கு பின் தீவிரவாத நோக்கம் இருக்கிறதா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

யார்

யார்

51 வயது நிரம்பிய ஹபீஸ் காசி, 1993ல் அமெரிக்காவில் குடியேறியவர். சில வருடங்களில் அவருக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைத்துள்ளது. அதன்பின் அவர் இந்தியா வரவேயில்லை. அமெரிக்காவில் அவர் தனியார் நிறுவனம் ஒன்றிற்காக டாக்சி டிரைவராக இருக்கிறார்.

பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு இல்லை

இந்த நிலையில் நேற்று காலை நியூயார்க் அருகில் இருக்கும் அமெரிக்க விமான படை தளத்திற்குள் இவர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார். அங்கு இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மீறி உள்ளே சென்றுள்ளார். காரை மிகவும் வேகமாக ஓட்டி சென்று அங்கு இருந்த பெரிய சுவர் ஒன்றில் மோதி இருக்கிறார்.

மோதிய வெடித்தது

மோதிய வெடித்தது

இவரது கார் முழுக்க கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. அதேபோல் நிறைய கெமிக்கல் பாட்டில்கள் இருந்துள்ளது. இதனால் அந்த கார் சம்பவ இடத்திலேயே பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஆனாலும் அங்கு இருந்து விமானங்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விசாரணை

விசாரணை

இந்த சம்பவம் காரணமாக ஹபீஸ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இது தீவிரவாத நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்று அமெரிக்க போலீஸ் தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.

English summary
Indian named Hafeez Kasi crashes his car into US Air Base. He died in this brutual accident. Police is currently investigating in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X