For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய நிறுவனம் அசத்தல்.. 500 ரூபாய் செலவு.. 90 நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்! ரேபிட் டெஸ்ட் கிட் ரெடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவின், சவுத் 24 பர்கானாஸைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஜி.சி.சி பயோடெக் இந்தியா, கொரோனா நோய் பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கிட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளது. ஒரு முறை பரிசோதனை செய்ய இந்த கிட் மூலம், ரூ .500 மட்டுமே செலவாகும்.

"ஆய்வு மற்றும் தயாரிப்பு பிரிவை சேர்ந்த எங்கள் ஊழியர்கள், 2 மாதங்கள் ஆய்வு செய்து இந்த கிட் தயாரித்துள்ளார்கள். இதில் உள்ள அனைத்து கருவிகளும் எங்கள் சொந்த தயாரிப்பு. எனவே இது செலவு குறைந்ததாகும்.

Indian firm develops Rapid test kit for finding corona

நாங்கள் 1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கியுள்ளோம், 40 லட்சம் கடையில் வைத்திருக்கிறோம். இந்தியா ஒரு நாளைக்கு 3 லட்சம் சோதனைகளை செய்தாலும் கூட, நாங்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் அரசுக்கு சப்ளை செய்ய முடியும்." என்று ஜி.சி.சி பயோடெக் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராஜா மஜும்தார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த உள்நாட்டு சோதனை கருவியில் இரண்டு படிகள் உள்ளன - QRT PCR மாஸ்டர் மிக்ஸ் ப்ரைமர் ஆய்வு மற்றும் RNA Template ஆகியவை ஒவ்வொன்றும் ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

திருச்சி என்ஐடியில் ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பிரதமரின் திட்டம் அறிமுகம்திருச்சி என்ஐடியில் ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பிரதமரின் திட்டம் அறிமுகம்

ராஜா மஜும்தார் மேலும் கூறுகையில், "இது ஒரு ரேபிட் சோதனைக் கருவியாகும், 90 நிமிடங்களுக்குள் கொரோனா நோயாளியிடம் பரிசோதித்து பார்த்து ரிசல்ட் கூற முடியும். மாதத்திற்கு 1 கோடி சோதனை கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் உள்ளது. " என்றார்.

மேலும் ஐசிஎம்ஆர் இந்த கருவிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும், ராஜா மஜும்தான் கூறியுள்ளார். சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த, ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டியதால், திருப்பியனுப்பப்பட்டன. இந்த நிலையில், உள்நாட்டு நிறுவனம், இதுபோன்ற பரிசோதனை கருவியை தயாரித்து சப்ளை செய்ய முன்வந்துள்ளது.

English summary
After 2 months of R&D we made this kit. It is cost effective as it contains all reagents produced by us. We've made 1 crore test kits&have 40 lakh in store. If India can do 3 lakh tests per day,we'll be able to support the govt without any problems:R Majumdar,MD,GCC Biotech India. We received approval from Indian Council of Medical Research (ICMR) on 1st May 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X