For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒட்டுமொத்த ராணுவமே வந்தாலும் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது... பரூக் அப்துல்லா

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குவித்தாலும் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் பதுல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா நேற்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுடனேயே இருக்கும்; ஜம்மு காஷ்மீரம் இந்தியாவுடனேயே இருக்கும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Indian Forces can’t defend Kashmir from terrorists, says Farooq Abdullah

இந்நிலையில் ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த இந்திய ராணுவமும் போரிடுவதற்கு ஜம்மு காஷ்மீருக்கு வந்து குவிந்தாலும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட முடியாது.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்றார்.

ஃபரூக் அப்துல்லாவின் தொடர்ச்சியான இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

English summary
National Conference patron Dr Farooq Abdullah on Saturday raked up another controversy after commenting on the capability of Indian Armed Forces at a press conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X