For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் திடீரென்று அதிகரித்த விமான பயணிகள்.. அசர வைக்கும் புள்ளி விவரம்!

கடந்த 6 மாதங்களில் இந்தியா முழுக்க மக்கள் அதிக அளவில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியர்கள் விமானத்தில் அதிகம் பயணிக்கின்றனர்- வீடியோ

    டெல்லி: கடந்த 6 மாதங்களில் இந்தியா முழுக்க மக்கள் அதிக அளவில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மக்கள் அதிக அளவில் கடந்த மாதங்களில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    இந்தியா முழுக்க மூடப்பட்ட சில சிறிய விமான நிலையங்களை மீண்டும் திறக்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல், பழைய விமான நிலையங்களையும் புதுப்பிக்க இருப்பதாக கூறியுள்ளது.

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா கடந்த சில நாட்களில் மிகவும் பெரிய அளவில், விமான போக்குவரத்தில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்தியர்கள் மாய்ந்து மாய்ந்து வானத்தில் பறந்து இருக்கிறார்கள்.

    எவ்வளவு

    எவ்வளவு

    விமான போக்குவரத்து துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி, கடந்த மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் மிகவும் அதிக அளவில் மக்கள் விமானத்தில் பயணித்து இருக்கிறார்கள். கடந்த மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் மொத்தம் 9.4 லட்சம் பேர் தினமும் இந்தியாவில் விமான போக்குவரத்தை( உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணம்) பயன்படுத்தி இருக்கிறார்கள். சென்ற வருடத்தை விட இது 17.7 சதவிகிதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    அதேபோல் உள்நாட்டு பயணம் மொத்தம் 20.3 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டு பயணம் 8.2 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், கொச்சி, நாக்பூர் ஆகிய விமான நிலையங்களில் மிகவும் அதிக அளவில் மக்கள், விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற 109 விமான நிலையங்களை விட இங்கு அதிக மக்கள் விமான போக்குவரத்தை பயன்படுத்தி உள்ளனர்.

    பிரச்சனை என்ன

    பிரச்சனை என்ன

    ஆனால் விமான போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமான அளவிற்கு, ஏர் டிராபிக் எனப்படும் விமான போக்குவரத்து அதிகமாகவில்லை. மாராங்க் விமான போக்குவரத்து குறைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகமானதால், விமானங்கள் தங்களது போக்குவரத்து எண்ணிக்கையை குறைத்து உள்ளது. இதனால் சென்ற வருடம் 16.6 சதவிகிதம் அதிகரித்த போக்குவரத்து, இந்த வருடம் 25.7 சதவிகிதம் குறைந்துள்ளளது.

    அதிகம்

    அதிகம்

    உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மக்கள் அதிக அளவில் கடந்த மாதங்களில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் விமானத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 17.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் 11.9, ரஷ்யாவில் 8.6, அமெரிக்கா 5.5, பிரேசிலில் 4.1 சதவிகிதம் பேர் அதிகரித்துள்ளனர்.

    வாய்ப்புள்ளது

    வாய்ப்புள்ளது

    இதே சமயத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கப்படவில்லை. எரிபொருள் விலை அதிகமானது ஒரு காரணம். விமான போக்குவரத்து துறை பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு புதிய விமானம் விடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு காரணம்.

    English summary
    Indian has seen a very high number of passengers in Planes this summer. According to Airports Authority of India (AAI) 9.4 lakh flyers travelled by Air in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X