For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிக மிக குறைவாக வரி செலுத்துகிற இந்திய தொழில் நிறுவனங்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே 20%க்கும் குறைவாக வரி செலுத்துகிற துறைகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் குத்தகைக்கு விடும் நிறுவனங்கள்தான் (லீசிங் கம்பெனிகள்) 1.5% மட்டுமே வரி செலுத்துகின்றன.

2012-13ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமான வரி வருவாய் 32.5%. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது அதிகமாக தோன்றினாலும் ஒவ்வொரு துறை சார்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஆராய்ந்தால் மிகப் பெரிய லாபத்தைத்தான் இந்த நிறுவனங்கள் அனுபவித்து வருகின்றன என்பதை உணர முடியும்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6,18, 806 நிறுவனங்கள் செலுத்திய வரியை ஆய்வு செய்து பார்த்ததில் பல்லாயிரம் கோடி புழங்கும் துறைகளைச் சேர்ந்த ஏராளமான கம்பெனிகள் 20%க்கும் குறைவான வரியைத்தான் செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

குத்தகை நிறுவனங்கள்

குத்தகை நிறுவனங்கள்

லீசிங் கம்பெனிகள் எனப்படும் குத்தகை நிறுவனங்கள்தான் மிகக் குறைவான வரி செலுத்தி இருக்கின்றன. அதாவது 1.5% வரி செலுத்தியுள்ளன.

சுரங்க ஒப்பந்த நிறுவனங்கள்

சுரங்க ஒப்பந்த நிறுவனங்கள்

இதற்கு அடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிற சுரங்கத்துறையில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்களோ 6.98% வரி செலுத்தியிருக்கிறது.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை உற்பத்தி துறையானது 9.98% வரி செலுத்தியுள்ளது.

கணக்கு தணிக்கை துறை

கணக்கு தணிக்கை துறை

ஆடிட்டர்கள், அக்கவுண்ட்டன்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய கணக்கு தணிக்கை துறை 10.15% வரி செலுத்தியுள்ளது.

திரைத்துறை லேப்கள்

திரைத்துறை லேப்கள்

கோடிகள் புழங்கும் திரைத்துறை சார்ந்த லேப்கள் 12.21% வரி செலுத்தியுள்ளன.

மின்துறை

மின்துறை

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை 13.67% வரி செலுத்தியிருக்கிறது.

உரம்

உரம்

உரம், பெயின்ட், ரசாயனத்துறையோ 14.08% வரி செலுத்தியிருக்கிறது.

தேயிலை, காபி

தேயிலை, காபி

தேயிலை மற்றும் காபி துறை 15.59% வரியை அரசுக்கு செலுத்தியுள்ளது.

இரும்பு

இரும்பு

இரும்பு உருகு துறையானது 15.82% வரியை செலுத்துள்ளது.

பேப்பர், சிமெண்ட்

பேப்பர், சிமெண்ட்

பேப்பர் தயாரிப்பு துறைய் 16.46%, சிமெண்ட் உற்பத்தி துறை 16.58% வரி செலுத்தியுள்ளன.

வனஸ்பதி, சமையல் எண்ணெய்

வனஸ்பதி, சமையல் எண்ணெய்

வனஸ்பதி சமையல் எண்ணெய் தயாரிப்பு துறை 17.08% வரியை செலுத்தியுள்ளது.

ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்

ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் 18.44% வரியை அரசுக்கு செலுத்தியுள்ளது.

மருந்து பொருட்கள்

மருந்து பொருட்கள்

மருந்துகள் தயாரிப்பு துறை 18.69% வரி செலுத்தியுள்ளது.

டயர் தயாரிப்பு

டயர் தயாரிப்பு

டயர் தயாரிப்பு நிறுவனங்கள் 19.25% வரி செலுத்தியுள்ளது.

English summary
In some things, the Indian tax regime can actually be generous to a fault to companies. The corporate profit tax rate for 2012-13 was 32.5%. But because of a raft of tax breaks available to them, they end up paying much less. Data for 2012-13 from 618,806 companies across sectors shows the effective tax rate for a number of sectors was less than even 20%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X