For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்ட கீமா, பாபட்

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்திய வார்த்தைகளான கீமா, பாபட் உள்ளிட்டவை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இனி அவை ஆங்கில வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு அட்வான்ஸ்ட் லர்னர்ஸ் அகராதியின் 9வது பதிப்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இந்த அகராதியில் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படும் சுமார் 240 ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Indian Kitchen Goes Global, ‘Keema', ‘Papad' Now English Words

அதில் பெரும்பாலான வராத்தைகள் இந்திய சமையல் அறைகளில் பயன்படுத்தப்படுபவை. கீமா, பாபட்(அப்பளம்), கறி லீப்( கறிவேப்பிலை) உள்ளிட்ட வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்திய ஆங்கில வார்த்தைகளில் பெரும்பாலானவை இந்தி வார்த்தைகள் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் சுமார் 900 முதல் 1000 வரையிலான இந்திய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

அகராதியின் 9வது பதிப்பில் புதிதாக 900 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகளில் 20 சதவீதம் ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களுடன் தொடர்புடையவை. உதாரணமாக செல்பி, ட்ரோல், கேட்பிஷ், ட்வீட்ஹார்ட், அன்பிரண்ட் ஆகியவை.

English summary
Reflecting the global popularity of Indian food, a number of Indian words like 'keema' and 'papad' have been accepted in the Oxford English dictionary for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X