For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவேச பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. ஏவுகணைகளை பார்த்து ஓட்டம் பிடித்த பாக். ராணுவம்.. பரபர வீடியோ

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாக். வீரர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி வந்த பாகிஸ்தான் ராணுவ படை, சில மணி நேரங்களுக்கு முன் உரி பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியது.

அதோடு இன்னொரு பக்கம் குரேஸ் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் 3 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதோடு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பாக் தாக்குதல்.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..இந்தியாவின் பதிலடியில் 7-8 பாக் வீரர்கள் பலிகாஷ்மீரில் பாக் தாக்குதல்.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..இந்தியாவின் பதிலடியில் 7-8 பாக் வீரர்கள் பலி

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி

இதையடுத்து இந்திய ராணுவம் அங்கு உடனே பதிலடி தாக்குதலை நடத்தியது . ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் இருந்து, பாகிஸ்தான் பதுங்கு குழிகளை குறி வைத்து தாக்கின இந்திய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள்.

ஏவுதளங்கள் குறி

ஏவுதளங்கள் குறி

பாகிஸ்தானிய வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் பங்கரவாதிகளுக்கான ஏவுதளங்களும் குறி வைத்து தாக்கப்பட்டன.
இது தொடர்பான வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஓட்டம் பிடிக்கும் பாகிஸ்தான் ராணுவம்

ஓட்டம் பிடிக்கும் பாகிஸ்தான் ராணுவம்

மற்றொரு வீடியோவில், இந்திய ராணுவத்தால் சுடப்பட்ட ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை பதுங்கு குழியை நோக்கி பறக்கும்போது ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள, தலைதெறிக்க வேகமாக ஓடுவதை பார்க்க முடிந்தது.

எல்லையில் கண்காணிப்பு

இந்தியாவின் ஆவேச பதிலடியில், சுமார் 7க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் ஆவேசத்தால், நிலைகுலைந்து போயுள்ளது பாகிஸ்தான் ராணுவம். எனினும், எல்லையில், இந்திய ராணுவம் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எந்த சவாலையும் எதிர்த்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Indian Army show the destruction of several Pakistani posts across the Line of Control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X