For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினச் சேர்கையாளர் நாவலில் இருந்து மெயில் ஐடி உருவாக்கும் இந்தியன் முஜாஹிதீன்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது சுவாரஷ்யமான துணுக்குச் செய்திகள் வெளிவருகிறது.அதன்படி அவர்கள் உபயோகப்படுத்தும் இ-மெயில் ஐ.டி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நாவலில் இருந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் முஜாஹிதீன் முக்கியத் தலைவர்களான ரியாஸ் பாட்கள், மற்றும் யாசின் ஷாருக் கான் என்ற பெயரில் தனது அமைப்பினரை தொடர்பு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Mujahhideen’s extract Mail Ids from Gay porn novel

இவர்கள், இ-மெயில் தொடர்புக்காக பத்துக்கும் மேற்பட்ட இ-மெயில் ஐ.டி.களை ரூவாக்கி உபயோகிப்பதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை தொடர்ந்து மாற்றி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இவ்வாறாக பயன்படுத்தப்படும் ஐ.டி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நாவலில் இருந்து எடுக்கப்படுவதாகவும், இவ்வாறு செய்யும்போது உளவுத்துறையின் கண்காணிப்பிலிருந்து சுலபமாக தப்பிக்க முடிவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவனான ரியாஸ் பாட்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள இ-மெயில் மற்றும் சாட் மட்டுமே உபயோகப்படுத்தி வருவதாகவும், மற்றொரு தலைவனான யாசின், எந்த ஒரு தகவல் மரிமாற்றமாக இருந்தாலும் உரிய நபர்களை நேரில் அழைத்து பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாசினுக்கு நெருங்கிய கூட்டாளிகளான ஐந்து பேர் உள்ளனர். உளவுத்துறையினர் அவர்கள் இருப்பிடத்தை கண்காணிப்பதைத் தவிர்பதற்காக எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அவர்களை நேரில் அழைத்து ஆலோசனை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளான்.

இந்நிலையில், தொழில்நுட்பாங்களின் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்து வந்த யாசின், தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசிய போது உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டான்.

English summary
Indian Mujahideen has used at least 10 different ids for communication and would change them regularly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X