For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை!

குஜராத் துறைமுகத்தில் இருந்து கராச்சி புறப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மிகப்பெரிய மர்ம பார்சல் ஒன்று இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் துறைமுகத்தில் இருந்து கராச்சி புறப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மிகப்பெரிய மர்ம பார்சல் ஒன்று இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) இன்று வெளியிட்ட லிஸ்டில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்ட் நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானை கருப்பு லிஸ்டிற்கு மாற்றும் இந்தியாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

Indian Navy is inspecting equipment on a Karachi bound vessel at port in Gujarat

இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போது வேறு ஒரு சிக்கலில் மாட்டி உள்ளது. இன்று மாலை குஜராத் துறைமுகத்தில் இருந்து கராச்சி புறப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மிகப்பெரிய மர்ம பார்சல் ஒன்று இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

குஜராத்தின் காண்ட்லா போர்ட் பகுதியில் உள்ள சரக்கு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மர்ம பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. டிஆர்டிஓ, பாதுகாப்பு படை, உளவுத்துறை, கடற்படை ஆகியோர் சேர்ந்து இந்த பார்சலை ஆராய்ந்து வருகிறார்கள்.

பாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்!பாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்!

இதில் சில நவீன கருவிகள் இருந்துள்ளது. இந்த கருவி ஏவுகணைகள் உருவாக்க பயன்படும் கருவி போல இருந்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க உதவும் சாதனம் ஆகும் இது. இது ஏவுகணை தயாரிக்கும் அதே உலோகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அங்கு தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

இங்கு ஏவுகணை தொடர்பான விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகிறது. இந்த பார்சல் எங்கிருந்து வந்தது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது, கராச்சியில் யாருக்கு அனுப்பப்படுகிறது. இவ்வளவு பெரிய சாதனத்திற்கு ஏற்றுமதி செய்ய யார் அனுமதி கொடுத்தது என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

English summary
Indian Navy is inspecting equipment on a Karachi bound vessel at port in Gujarat today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X