For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய துணை ராணுவத்தில் இனி அதிக பெண் காவலர்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியத் துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சகஸ்திர சீமா பால் ஆகியவற்றில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

Indian Police Force to have more women

இவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இதனால் மேலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அவசியம்:

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குழுவின் 6 ஆவது பரிந்துரை அறிக்கை, துணை ராணுவ படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவது உடனடி அவசியம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது.

முதல்கட்ட பணி:

இந்த சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதில், "முதல் கட்டமாக படைக் காவலர் தகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

33 சதவீதம் இட ஒதுக்கீடு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும், எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத பெண்களும் காவலர்களாக நிரப்பப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேம்படுத்தும் நடவடிக்கை:

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
it seems like 2016 will be a good year for women empowerment in India. In a move that will enhance the representation of women in Central Armed Police Forces (CAPF), Union Home Minister Rajnath Singh on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X