For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரேமுறை பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள்: ராஜதானி ரயிலில் அறிமுகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Indian Railways cleanliness drive
டெல்லி: ரயில்களில் ஒரே முறை பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பெங்களூர்-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இதுபோன்ற ஒரு நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

ரயில்வே நிர்வாகத்தில் சுத்தம், சுகாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் விருப்பம். இதன் ஒருபகுதியாக ரயில்வே நிர்வாகம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. பெங்களூர்-டெல்லி நடுவே இயங்கும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்கட்டமாக இந்த நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

மேலும், பயோ கழிவறைகள், மூட்டை பூச்சி இல்லாத ரயில் பெட்டிகள் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.940 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

English summary
If you are on board an Indian Railways coach and get bed linen never used by anyone, your chances of getting a good night's sleep increase manifold, especially if the compartment is pest-free
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X