For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் எளிய மாற்றம்: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வு எழுதலாம்!

ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை ரயில்வேத்துறை எளிமையாக்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில்வே தேர்வுகளை இனி தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுத முடியும்...வீடியோ

    டெல்லி: ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை ரயில்வேத்துறை எளிமையாக்கியுள்ளது.

    இந்திய ரயில்வேயில் 89,409 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்ககளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் குரூப் சி ஒன்றாம் நிலை பிரிவுகளில் பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    விண்ணப்பத்தில் மாற்றம்

    விண்ணப்பத்தில் மாற்றம்

    சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் ரயில்வே விண்ணப்பங்களில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

    10 மற்றும் ஐடிஐ

    10 மற்றும் ஐடிஐ

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் ஐடிஐ சான்றிதழும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். இந்நிலையில் அனைத்து சமூதாயத்தினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் இந்திய ரயில்வே விண்ணப்பங்களை எளிதாக்கியுள்ளது.

    தமிழ் உள்ளிட்ட 15 மொழிகள்

    தமிழ் உள்ளிட்ட 15 மொழிகள்

    அதன்படி ரயில்வே தேர்வுக்கான கேள்வித்தால் 15 மொழிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தி, இங்கிலிஷ், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வயது வரம்பு தளர்வு

    வயது வரம்பு தளர்வு

    இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, யூஆர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்வு 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.400 திருப்பி வழங்கப்படும்

    ரூ.400 திருப்பி வழங்கப்படும்

    தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படாமல்ல 500 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் போது 400 ரூபாய் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Indian Railways Eases Application for Mega-recruitment Plan. Age relaxation restored for various categories of candidates by further extending relaxation by 2 more years. Question papers to candidates will be provided in 15 languages. Candidates can now make signature in any language instead of only in Hindi or English.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X