For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இ-ஆதார் அட்டையை ரயில் பயணத்தின் போது அடையாளமாக காட்டலாம்...மத்திய அரசு அறிவிப்பு!

இ- ஆதார் அட்டையை ரயில் பயணத்தின் போது அடையாமாக பயன்படுத்தலாம் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்து அதனை அடையாளமாக ரயில் பயணத்தின் போது பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்பவர்கள் இனி இ ஆதார் அட்டையை தங்களது அடையாளமாக காட்டலாம் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இது வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்தே பயணித்து வருகின்றனர்.

Indian Railways permits e-Aadhar as identity proof

இந்நிலையில் அசல் அட்டைகளுக்கு பதிலாக மின்னணு அடையாள அட்டைகளை காண்பித்து பயணிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதனையடுத்து ஒரிஜினல் ஆதார் அட்டைக்கு பதிலாக மின்னணு முறையில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து வைத்து அதனை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின் போது பயணிகள் அடையாள அட்டையாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஆதாரங்களின் பட்டியலையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியன் ரயில்வேயில் முன்பதிவு செய்த பயணிக்கும் பயணிகள் ஆதாரமமாக வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டவற்றின் பட்டியல் இதோ:

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை

பாஸ்போர்ட்

பான் கார்டு

ஓட்டுனர் உரிமம்

மத்திய/மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை

பள்ளி/கல்லூரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை

புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக்

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அட்டைகள்

ஆதார் அட்டை அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட இ- ஆதார்

ரேஷன் அட்டை

English summary
The Union Railway Ministry has decided to permit downloaded Aadhaar card as proof of identity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X