For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு-காஷ்மீரில் 99 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை (நவம்பர் 12) முதல் மீண்டும் தொடங்குகிறது

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

Indian Railways resume train service from tomorrow in Kashmir

இந்த அறிவிப்பால் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பேருந்து மற்றும் ரயில்சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. மேலும் பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது

இந்நிலையில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் மெல்லமெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பின்னர் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. இணைசேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடையும் விலக்கி கொள்ளப்பட்டது

அந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்அந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதற்கு முன்னோட்டமாக மத்திய காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பட்காம்- பாரமுல்லா ரயில் பாதையில் அதிகாரிகள் திங்கள்கிழமை தண்டவாளங்களை பரிசோதிக்க சோதனை ஓட்டம் நடத்தினார்கள். ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரயில் சேவைகள் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
Indian Railways resume train service from tomorrow in Kashmir the Indian Railways on Monday conducted a trial run between Banihal and Baramulla.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X