For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் பனிச்சரிவு.. பனியில் சறுக்கி பாக். எல்லையில் விழுந்த இந்திய ராணுவ வீரர்.. தேடுதல் வேட்டை!

காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் பனிச்சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நெஹி, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார்.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் பனிச்சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நெஹி, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். இவரை தேடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் கடும் பனிப்பொழிவு நிகழந்து வருகிறது. இதனால் காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி பனிச்சரி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Indian soldier slipped in avalanche accidents fell down in Pakistan

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இருந்த ராணுவ டென்ட் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் ஒருவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதேபோல் சோன்மார்க் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 பொதுமக்கள் சிக்கி பலியானார்கள். இந்த நிலையில் குல்மார்க் பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் வலுக்கி இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நெஹி கீழே விழுந்தார்.

இவர் அந்த பனிச்சரிவில் சிக்கி, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டார். குல்மார்க் அருகே இருக்கும் பாகிஸ்தான் எல்லையில் இவர் விழுந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம்.. ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு!அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம்.. ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு!

ராஜேந்திர சிங் நெஹி இந்திய ராணுவத்தில் 2002ல் இருந்து பணியாற்றி வருகிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த விஷயம் குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. ராஜேந்திர சிங் நெஹியை பாகிஸ்தான் எல்லையில் பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

அவரை நாங்கள் கஷ்டடியில் எடுக்கவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இதனால் ராஜேந்திர சிங் நெஹிக்கு என்ன ஆனது என்று அவரின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

English summary
Indian soldier slipped in avalanche accidents fell down in Pakistan: Search Ops underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X