For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருக்கியில் உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் : சுஷ்மா, விஜய் கோயல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: துருக்கியில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். துருக்கியில் அனைத்து இந்திய வீரர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறிஉள்ளார்.

துருக்கியில் நடைபெறவிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக 148 இந்திய விளையாட்டு வீரர்கள் சென்று உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 11 மாணவ, மாணவிகளும் அதிகாரிகளும் சென்று உள்ளனர்.

Indian World School Games team stranded in Turkey safe

இந்நிலையில் துருக்கியில் ஒருபிரிவு ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதால் அசாதாரண சூழ்நிலை எழுந்தது. இதன் காரணமாக குழந்தைகளை அனுப்பிய பெற்றோர்கள் பதற்றம் அடைந்தனர். அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

துருக்கியில் சிக்கியுள்ள தமிழக விளையாட்டு வீரர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தி வருவதாக தமிழக பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது.

ட்ராப்சோன் பகுதியில் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மாணவிகள் கூறியுள்ளனர். அங்கிருந்து பேட்டி அளித்து உள்ள சென்னையை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, "டிராப்சோனில் நகரில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு கிராமத்தில் நாங்கள் தங்கியுள்ளோம். காலையில் என் பெற்றோர் தொலைபேசி வாயிலாக சம்பவம் தொடர்பாக எனக்கு தகவல் தெரிவித்தார்கள். ஆனால் வெளியே சென்று பார்த்தபோது அனைத்து இயல்பாகவே இருப்பதுபோல் இருந்தது.

சாலைகள் சற்று வெறிச்சோடியிருந்தது. சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் எல்லோரும் பரபரப்பாக தங்கள் அலுவல்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே தோன்றுகிறது என்றார்.

தங்கியிருக்கும் இடத்தைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட்டுப்போட்டிகள் 11ம் தேதி தொடங்கின. 18ம் தேதி முடியும். போட்டிகள் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன.

அவை நடக்குமா நடக்காத என்பது தெரியவில்லை. நாங்கள் அங்காரா அல்லது இஸ்தான்புல் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளோம். அதற்குள் நிலைமையை சீரடைந்து விடும் என்று நம்புகிறோம் என்று மாணவி கூறியுள்ளார்.

தமிழக, வீரர், வீராங்கனைகளை பத்திரமாக தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே டிராப்சோனில் உள்ள வீரர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், அனைவரும் திட்டமிட்டபடி 18ம் தேதி நாடு திரும்புவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இந்நிலையில் துருக்கியில் அனைத்து இந்திய வீரர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் கூறிஉள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோயல், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியாவிற்கான துருக்கி தூதர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு உள்ளேன், அவர்கள் 148விளையாட்டு வீரர்களும் 38 அதிகாரிகளும் பத்திரமாக உள்ளனர் என்பதை உறுதி செய்து உள்ளனர் என்று கூறிஉள்ளார்.

பள்ளி விளையாட்டு இந்திய கூட்டமைப்பு உதவியுடன் இந்திய விளையாட்டு ஆணையம் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.மத்திய அரசு, குறிப்பாக வெளியுறவுத்துறை விளையாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.

விளையாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், பாதுகாப்பு குறித்து உறுதி அளித்து உள்ளதாகவும் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். டிராப்சோனில் உள்ள விளையாட்டு வீரர்களைப் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள பிபி சக்சேனா 00905312131652 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று விஜய் கோயல் கூறியுள்ளார்.

English summary
The Sports Minister said all 148 Indian athletes participating in the World School Games at Trabzon in Turkey are safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X