For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற நாடுகளைவிட மத சுதந்திரத்திற்கு அதிக ஆதரவு தருவது இந்தியர்கள்தான்: அமெரிக்க நிறுவனம் சர்வே

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மதசார்பற்ற நாடாகவும், அனைத்து தரப்புக்கும் உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று நாட்டின் 80 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் சராசரியைவிட இது அதிகம் என்பது சிறப்பு.

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு அமைப்பு ஒன்று, உலகின் 38 நாடுகளில், மத சுதந்திரம் பற்றிய கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதில் 40 ஆயிரத்து, 786 மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

Indians believe religious freedom very important: Survey

கருத்துக்கணிப்பு கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல், மே 21ம் தேதிவரை நடந்துள்ளது.

இதில் 83 சதவீத இந்தியர்கள், மத சுதந்திரம் அவசியம் என கூறியுள்ளனர். உலக சராசரி 74 சதவீதம் மட்டுமே. இந்தியாவில், 74 சதவீத மக்கள், பத்திரிகைக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவசியம் என்று கூறியுள்ளனர். அதேநேரம், இணையதளங்களுக்கு (சமூக வலைத்தளங்கள்) சுதந்திரம் அளிக்க, ஆதரித்து, 38 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான உரிமை தரப்பட வேண்டும் என்று 71 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகளில் இது 65 சதவீதம் என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளது.

English summary
Eighty-three per cent Indians say it is very important to have the freedom to practice their religion compared with a global median of 74 per cent across the nations polled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X