For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டு வேலை வேண்டுமா?: இந்த 2 கோவில்களில் பிரார்த்தனை செய்யுங்க!

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட 2 கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தால் தங்கள் விருப்பம் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.

முன்பு எல்லாம் மக்கள் கோவில்களுக்கு சென்று எனக்கு நல்ல ஆரோக்யத்தை கொடு சாமி, செல்வத்தை கொடு, நல்ல குழந்தைகளை கொடு என்று வேண்டுவார்கள். ஆனால் தற்போது படித்த பட்டதாரிகளோ கடவுளே, எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடு, அப்படி வாங்கிக் கொடுத்தால் உனக்கு அதை காணிக்கையாக செலுத்துகிறேன் இதை செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொள்கிறார்கள்.

தற்போது வெளிநாடு செல்ல விசா கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்வதற்காகவே இரண்டு கோவில்கள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்ஹான் கிராமத்தில் 150 ஆண்டு பழமையான குருத்வாரா(கோவில்) உள்ளது. அந்த குருத்வாராவுக்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள்.

விசா

விசா

அந்த குருத்வாராவில் விமான பொம்மையை வைத்து தங்களுக்கு விரைவில் வெளிநாடு வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். அவ்வாறு பிரார்த்தனை செய்த பலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

விமான பொம்மை

விமான பொம்மை

குருத்ராவாராவில் வைத்து வேண்ட வசதியாக அதன் நுழைவாயிலில் விமான பொம்மைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி கோவில்

பாலாஜி கோவில்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சில்கூர் பாலாஜி கோவிலில் பிரார்த்தனை செய்தால் விரைவில் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த கோவிலில் பிரார்த்தனை செய்த பல சாப்ட்வேர் என்ஜினியர்கள் தற்போது வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் இந்த கோவிலுக்கு அந்த 3 நாட்களில் 70 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

English summary
People throng a 150-year-old Sikh gurdwara (temple) in Talhan village in Punjab and Chilkur Balaji temple near Hyderabad to pray God to get them visa to go abroad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X