For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

பிரம்மபுத்திர நதியில் அமைந்துள்ள இந்தியாவிலேயே மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் மிக நீளமான பாலம் பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அஸ்ஸாம் - அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சாடிய பாலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான பாலமாக கருதப்படும் இது 9.15 கி.மீ நீளம் கொண்டது.

Indias longest river bridge to be inaugurated by PM Modi

இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அஸ்ஸாம் - அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாக குறையும். இந்த பாலம் இரு மாநிலங்களுக்கு வர்த்தக போக்குவரத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் மூலம் ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மேலும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை இன்று திறந்து வைக்க உள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi will inaugurate the 9.15-km-long Dhola-Sadiya bridge over the Brahmaputra river on May 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X