For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் நரேந்திர மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

India’s Youth roots for Narendra Modi, hopeful for a change
டெல்லி: 2020ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாகிவிடும் என்ற கனவை மெய்ப்பிக்கும் வகையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆளும் அரசின் ஊழல்கள்தான் தலைப்புச் செய்திகள்! நாட்டின் பொருளாதாரமோ அதலபாதாளத்துக்குப் போய்விட்டது! இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொள்கிறது.

நாட்டின் பிரதமரோ எப்போதுமே 'நான் அமைதியை கடைபிடிப்பவன்." என்ற கொள்கையோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படியான ஒரு சூழலில்தான் நம்பிக்கை கீற்றாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட போது நீதிகேட்டு இளைஞர் சமூகம் வீதிக்கு வந்து போராடியது. இந்த போராட்டத்தின் முடிவாக டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை இளைஞர் சமூகம் கொண்டாடுகிறது.

இந்த மகிழ்ச்சியுடன்தான் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் அறிவிப்பும் இளைஞர்களுக்க் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக வந்துள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல லட்சம் இளைஞர்களை இதுவரை நேரில் சந்தித்து நம்பிக்கையை விதைத்திருக்கிறார் நரேந்திர மோடி.

2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்றால் நாடு விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த ஒருவர் நாட்டின் பிரதமராக முதல் முறையாக பொறுப்பு ஏற்கிறார் என்ற பெருமை மோடிக்கு உண்டு! ஆம் அவர்தான் இளைஞர் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்! முதல் முறை வாக்களிக்கப் போகும் வாக்காளர்களை ஆன்லைன் வழியே கவர்ந்து வைத்திருப்பவர் நரேந்திர மோடி!

குஜராத் மாநிலத்தைப் போல இந்தியாவையும் வளப்படுத்துவார் மோடி என்ற நம்பிக்கையோடு நாடு கத்திருக்கிறது. இளைஞர்களும் ஊழலற்ற ஒரு அரசை குஜராத்தில் கொடுத்ததைப் போல மத்தியிலும் நரேந்திர மோடி கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

English summary
Since decades, we have been casually listening to references of India becoming the next Super Power. Sometimes a visiting foreign dignitary calls India the emerging Super Power by 2020; sometimes a local leader, just to mobilize and energise the gathered masses, refers to India as the nation to watch out for.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X