For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷீனா கொலையில் இந்திராணியை போலீசில் மாட்டிவிட்டது யார் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: இந்திராணி முகர்ஜியின் முன்னாள் டிரைவர் ராய் குடிபோதையில் போலீஸ் இன்பார்மரான ஆட்டோ டிரைவரிடம் ஷீனா போரா கொலை பற்றி உளறியதால் தான் அவர் சிக்கியுள்ளார்.

இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் வைத்து கொலை செய்து ராய்கட்டில் அவரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார். இந்த கொலையில் அவருக்கு அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ராய் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

கொலை செய்த பிறகு இந்திராணி தனது டிரைவருக்கு ரூ. 5 லட்சம் அளித்து அவரை வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு கூறிவிட்டு லண்டனுக்கு சென்றுவிட்டார்.

டிரைவர்

டிரைவர்

ஷீனா கொலை பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ராய் கடந்த ஆகஸ்ட் மாதம் குடித்துவிட்டு சக ஆட்டோ டிரைவரிடம் கொலை பற்றி உளறியுள்ளார்.

உளறல்

உளறல்

ஒரு பெரிய பணக்கார பெண் தனது மகளையே கொன்றுவிட்டு அதை பற்றி வெளியே கூறாமல் இருக்க மிகக் குறைவான அளவு பணம் அளித்ததாக ராய் சக ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆட்டோ டிரவைர் ஒரு போலீஸ் இன்பார்மர் என தெரியாமல் ராய் கொலை பற்றி தெரிவித்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

ராய் தெரிவித்த தகவல்களை அந்த ஆட்டோ டிரைவர் கார் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் கதமிடம் கூறியுள்ளார். போலீசாருக்கு அப்போது யார் கொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரம் தெரியாது.

விசாரணை

விசாரணை

ராயை பிடித்து போலீசார் விசாரித்தபோது தான் இந்திராணி முகர்ஜி தனது மகளையே கொலை செய்த விபரம் போலீசாருக்கு தெரிய வந்து வழக்குப்பதிவு செய்து இந்திராணியை கைது செய்தனர்.

English summary
It is Indrani Mukerjea's former driver Rai who gave clue to police about Sheena Bora murder. He grumbled about the murder to an auto-driver cum police informer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X